Puttalam Online
sports

லிவர்பூல் அணி வெற்றி

  • 2 October 2017
  • 458 views

ரூஸி சனூன்  புத்தளம்

புத்தளம் கால்பந்தாட்ட லீக் புத்தளத்தில் தொடராக நடாத்திக் கொண்டிருக்கும் ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் நகரின் பிரபல லிவர்பூல் அணி தில்லையடி நியூ ப்ரண்ஸ் அணியினை 08 : 01 கோல்களினால் பந்தாடியது.

லீக் நடாத்தும் போட்டி தொடரின் இந்த 25 வது ஆட்டம் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (30) மாலை நடைபெற்றது.

இந்த போட்டியில் புள்ளி விபர பட்டியலில் 07 புள்ளிகளோடு காணப்படும் நியூ ப்ரண்ஸ் அணியினை 12 புள்ளிகளோடு காணப்படும் லிவர்பூல் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் லிவர்பூல் அணி வெற்றிபெற்றதன் மூலம் அவ் அணி 03 புள்ளிகள் அதிகரிப்போடு மொத்தமாக 15 புள்ளிகளுக்கு முன்னேறியுள்ளதோடு, அதிகமான கோல்களை செலுத்திய அணியாகவும் பதிவாகியுள்ளது.

போட்டி ஆரம்பிக்கப்படும் பொழுது நியூ ப்ரண்ஸ் அணி சார்பாக 7 வீரர்களே களம் இறங்கினர். எனினும் போட்டி தொடர்ந்து செல்கையில் அவ் அணியின் வீரர்கள் பத்தாக அதிகரித்தது. இந்த நிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்திய லிவர்பூல் அணியினர் ஒன்றன் பின் ஒன்றாக கோல்களை செலுத்தி கோல் மழையாக மாற்றினர்.

போட்டிக்கு நடுவர்களாக ஏ.எம். பஸ்ரின், ஏ.ஏ.எம். கியாஸ், எம். சர்ஜூன்  மற்றும் லீக் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக் ஆகியோர் கடமையாற்றினர்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All