Puttalam Online
current

தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்று போட்டிகளில் சாஹிராவின் 2 அணிகள் பங்கேற்பு.!!!

  • 3 October 2017
  • 350 views

ஹனான் அஹமத்

விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு போட்டியின் உதைபந்தாட்ட சுற்றுபோட்டியிற்கான இறுதிக்கட்ட (Final Round) போட்டிகளில் பங்குகொள்வதற்காக புத்தளம் சாஹிரா கல்லூரியின் 18 மாற்றும் 20 வயதிற்குற்பட்ட இரு அணிகள் தெரிவாகியுள்ளன.

கொழும்பில் நேற்று (02) உத்தியிகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டிகளின் அங்குரார்பன நிகழ்வில் சாஹிராவின் வீரர்கள் உட்பட விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். தொடர்ந்து 3 தினங்கள் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் 18 வயதிற்குட்பட்ட போட்டிகள் கொழும்பு City League மைதானத்திலும் 20 வயதிற்குட்பட்ட போட்டிகள் கொழும்பு Campell Park மைதானத்திலும் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் எல்லா மாகாணங்களையும் பிரதிநிதித்துவபடுத்தும் மொத்தம் 27 பாடசாலைகள் பங்குகொள்வது குறிப்பிடத்தக்கது.

வடமேல் மாகாணத்தில் இருந்து சாஹிரா கல்லூரி, சியம்பலாகஸ்கொடுவ மதீனா மற்றும் புத்தளம் கடையமொட்டை முஸ்லிம் வித்தியாலயம் என்பன பங்குகொள்கின்றன. இதில் சாஹிரா அணி வென்னப்புவ ஜோசப் வாஸ் போன்ற பலம் வாய்ந்த அணிகளை வெற்றி கொண்டு மாகாண சம்பியன் ஆனது சிறப்பம்சமாகும்.

சாஹிராவின் 20 வயது அணி இடம்பெற்றுள்ள குழுவில் கொழும்பு பெனடிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் ஹென்றி கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி, மாத்தறை தோமஸ்  கல்லூரி மற்றும் பளுகொல்லாகம மகா வித்தியாலயம் என்பன அடங்குகின்றன.

சாஹிரா கல்லூரி 2 அணிகள் விளையாடவுள்ள போட்டிகள் அணைத்தையும் Zahira Sports இன் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கமான Zahira Sports இல் Facebook Live ஊடாக அனைவருக்கும் ஒளிப்பரப்ப Zahira Sports குழுவினர் தயாராகவுள்ளனர் என்ற நற்செய்தியை இதனூடு அறியத்தருகின்றோம்.

மிகவும் விரு விருப்பாக நடைபெறவுள்ள இப்போட்டிகளுக்கு கொழும்பில் வசிக்கும் சாஹிராவின் பழைய மாணவர்கள் அனைவரையும் மைதானத்திற்கு வந்து ஆதரவு தருமாறு Zahira Sports குழுவினர் வேண்டிகொள்கின்றனர்.

கடந்த வருடம் சாஹிரா கல்லூரி 20 வயது அணி பிரிவு 3 உதைபந்தாட்ட சுற்று போட்டியில் அகில இலங்கை ரீதியில் சம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All