Puttalam Online
regional-news

பிறந்தகத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்ட ஊடகவியலாளர் மர்லின்…

  • 11 October 2017
  • 482 views

புத்தளம், மதுரங்குளி, விருதோடையை தளமாகக் கொண்டியங்கும் கே.பி.எஸ். பொலிட்டிக்ஸ் (கல்பிட்டி பிரதேச அரசியல்) வட்ஸ்அப் குழுமத்தின் அங்கத்தவர் ஒன்றுகூடலும் விருதோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தினகரன் தேசியப் பத்திரிகையின் இணையாசியருமதான மர்லின் மரிக்காரைக் பாராட்டு கௌரவிக்கும் வைபவமும் மதுரங்குளி மல்லம்பிட்டியிலுள்ள ட்ரீம் சென்டர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

விருதோடையில் பிறந்து வளர்ந்த மர்லின் மரிக்கார், விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயம், கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் புத்தளம் சாஹிரா கல்லூரியில் கல்வி பயின்று கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றிலும் ஊடகவியல் கற்கைகளை மேற்கொண்டுள்ளார். விருதோடை பிரதேசதத்தின் மேம்பாட்டுக்கு பல சேவைகள் ஆற்றியுள்ள இவர், கடந்த 23 வருடங்களாக   தினகரன் மற்றும் தினகரன் வார மஞ்சியில் முழு நேர ஊடகவியலாளராகக் கடமையாற்றி வருகிறார்.

இவர் விஞ்ஞானம், மருத்துவம், சமூகவியல் தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவியல் ரீதியிலான விழிப்புணர்ச்சியையும் மேம்பாட்டையும் ஏற்படுத்தும் நோக்கில் ஆயிரத்திற்கும் மேற்கட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது பல கட்டுரைகள் விஞ்ஞானம், சுகாதாரம் தொடர்பான பல தேசிய விருதுகளை வெற்றி பெற்றுள்ளன. அதனால் அவர் கொழும்பு, கண்டி, பேருவளை, காத்தான்குடி, புத்தளம், இரத்தினபுரி. மட்டக்களப்பு, சாய்ந்தமருது, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

விஞ்ஞானம், ஆரோக்கியம் மற்றும் சமூகவியல் துறைகளில் மக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ஊடகவியல் துறை ஊடாக உழைத்துவரும் இவர், பல தேசிய மட்ட விருதுகளை வென்றெடுத்து, பல்வேறு கௌரவிப்புகளையும் பெற்று பிறந்த ஊரான விருதோடைக்கும், குறிப்பாக கல்பிட்டி பிரதேசம் உள்ளிட்ட புத்தளம் மாவட்டத்திற்கும் பெருமையையும், கௌரவத்தையும் மதிப்பையும் தேடிக் கொடுத்துள்ளார். அவரது இந்த அபார சேவைகளைக் கௌரவிக்கும் வகையிலேயே கே.பி.எஸ் பொலிட்டிக்ஸ் ரீம் நைட் நிகழ்வில் இவர் கௌரவிக்கப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

இவ்வைபவத்தில் வட்ஸ்அப் குழுமத்தின் அட்மின்களான எம். இஸட்.எம். பஸ்லிகான், ஏ. எம். ஜிப்ரி ஆசிரியர்,  எம். எச். எம் அஸாம் ஆகியோர் இணைந்து மர்லின் மரிக்காருக்கு பொன்னாடை போர்த்தி, ஒமேகா கன்ஸ்ட்ரக்ஸன் உரிமையாளர் எம்.ஐ.எம். நயீமும், ட்ரீம் மண்டப உரிமையாளர் நூர் நஸ்மி  இணைந்து நினைவுச் சின்னமும் வழங்கி பாராட்டி கௌரவிப்பதைப் படங்களில் காணலாம்.

இந்நிகழ்வில் புத்தளம் தொகுதியிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்களும், முக்கியஸ்தர்களும் கட்சி வேறுபாடுகளுக்கு  அப்பால் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும். குறிப்பாக வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான எம்.ரி.எம் தாஹிர் (ஸ்ரீ.ல.சு.க), எம்.எச்.எம். நியாஸ் (ஸ்ரீ.ல.மு.கா), முன்னாள் பிரதியமைச்சர் கே. ஏ. பாயிஸ் (ஸ்ரீ.ல.மு.கா), முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா ஆப்தீன் (அ.இ.ம.கா), புத்தளம் நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவர் .எம். அலிக்கான் (ஐ.தே.க), புத்தளம் நகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அலி சப்ரி (அ.இ.ம.கா), ஸ்ரீ.ல.மு.கா உயர்பீட உறுப்பினர் கொட்டராமுல்ல ரில்வான் ஹாஜியார், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம். எஸ். ரபீக், ஸ்ரீ.ல.மு.கா. உயர்பீட உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார், எம்.ஐ.எம்.ஆசிக், (அ.இ.ம.கா. விருதோடை அமைப்பாளர்) ரபாத் அமீன் (ஐ.தே.க விருதோடை அமைப்பாளர் ), எஸ்.எம். சித்தீக் (ஐதே.க விருதோடை அமைப்பாதளர்) உட்பட மதுரங்குளி, விருதோடை, சேனைக்குடியிருப்பு, நல்லாந்தழுவ, கடையாமோட்டை, புழுதிவயல், புத்தளம், ரெட்பானா, சமீரகம, பெருக்குவட்டான், கொத்தான்தீவு பாலாவி உட்பட பல பிரதேசங்களையும் சேர்ந்த இந்த வாட்ஸ்அப் குழுமத்தில் அங்கத்தவர்களும், முக்கியஸ்தர்களும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

————————————————————

குறிப்பு –  2013.04.13  ஆம் திகதி புத்தளம் முஸ்லிம் கலாசார மண்டத்தில் நடைபெற்ற Puttalam Online இணையதளத்தின் 2 ஆவது ஆண்டு நிறைவு  விழாவில் ஊடகத் துறையில் சிறப்புப் பங்களிப்பு செய்துவரும் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அவர்களுள் தினகரன் ஆசிரியர் பீட உறுப்பினர் மர்லின் மரிக்காரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அரசியல் சாராது அழகாக நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிதான் – பேராசிரியர் அனஸ்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All