Puttalam Online
other-news

2018 பொதுநலவாய போட்டி: பிரிட்டன் மகாராணியின் செய்தி தாங்கிய அஞ்சல் ஓட்ட கோல்

  • 12 October 2017
  • 41 views

2018 பொதுநலவாய போட்டிகளுக்காக பிரிட்டன் மகாராணி விடுத்த செய்தியை தாங்கிய அஞ்சல் ஓட்ட கோல், இன்று இலங்கைக்கும் கொண்டுவரப்படவுள்ளது.

1930 ஆம் ஆண்டு தொடக்கம் அனுசரிக்கப்படும் பாரம்பரியத்திற்கு அமைய, இந்த கோல் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கமாகும். இதன் பிரகாரம் கோலைக் கொண்டுவரும் அதிகாரிகள் இன்று பிற்பகல் 4 மணி அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழு, அஞ்சலோட்ட கோலை வாகன ஊர்தியில் கொழும்புக்கு கொண்டுவந்து ஜனாதிபதியிடம் கையளிப்பார்கள். இந்தக் கோல் வெள்ளிக்கிழமை விசேட ரெயிலில் காலிக்கு எடுத்துச் செல்லப்படும். சனிக்கிழமை கொழும்பு ரோயல் கல்லூரியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என தேசிய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இந்த போட்டி இடுத்தவருடம் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில்; நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All