Puttalam Online
other-news

மன்னார் பூவரசங்குளம் அல் பஹா கரப்பந்தாட்ட அணி சம்பியன்

  • 12 October 2017
  • 309 views

ரூஸி சனூன்  புத்தளம்
புத்தளம் தம்ப பண்ணி மீள் குடியேற்ற அல் ஜெஸீரா விளையாட்டு கழகம் நடாத்திய அணிக்கு நான்கு பேர்களை கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மன்னார் பூவரசங்குளம் அல் பஹா கரப்பந்தாட்ட அணி சம்பியனாக தகுதி பெற்றுள்ளது.
இந்த போட்டி தொடர் அண்மையில் (08) புத்தளம் தம்ப பண்ணி ஆப்தீன் கலவன் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
திறந்த போட்டித்தொடரான இந்த இந்த போட்டி தொடரில் நாடளாவிய ரீதியாக 36 க்கும் மேற்பட்ட கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டன.
நடைபெற்ற இந்த போட்டி தொடரில் பூவரசங்குளம் அல் பஹா கரப்பந்தாட்ட அணி சம்பியனாகியதோடு இரண்டாம் இடத்தினை மன்னார் தம்பட்ட முசலி கட்டு அணி பெற்றுக்கொண்டது.
சம்பியன் அணிக்கு 30 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும், இரண்டாம் இடம்பெற்ற அணிக்கு 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் வழங்கி வைக்கப்பட்டதோடு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அண்மையில் புத்தளம் மன்னார் வீதி இரண்டாம் மைல் கல் மதீனா நகர் மீள் குடியேற்ற கிராமத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியிலும் இதே மன்னார் பூவரசங்குளம் அல் பஹா கரப்பந்தாட்ட அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All