Puttalam Online
regional-news

புத்தளம் குடி நீர் திட்டத்தின் முதல் கட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பம்

  • 13 October 2017
  • 722 views

(Mohamed Iksab)

நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் புத்தளம் குடி நீர் திட்டத்தின் முதல் கட்ட உள்ளார்ந்த பரீட்சார்த்த நடவடிக்கைகள் இன்று (13-10-2017) இடம்பெற்றது.

கலா வாவியின் நீர் திசை திருப்பப்பட்டு அச்சுமலை நீர் தேக்கத்தினூடாக சேமிக்கப்பட்டு பின் அது எழுவாங்குளத்திலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பாய்ச்சப்படுகின்றது. பின்னர் பல்வேரு பொறிமுறைகள் மூலம் நீர் சுத்திகரிக்கப்பட்டு எழுவன்குளத்திலிருந்து சுமார் 30 Km தூரத்திலுள்ள தற்போதைய புத்தளம் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பாய்ச்சப்பட்டு அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் நீர் தாங்கியிலிருந்து பல புதிய இடங்களுக்கு விநியோகிக்க தீர்மானிக்க பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பமாகிய இந்த திட்டம் சென்ற வருடம் இறுதிப்பகுதியில் முடிக்க திட்டமிட்ட போதும் , நிர்மாண பணிகளில் ஈடுபடும் கொரியா நிறுவனத்தின் தாமதம் மற்றும் பல்வேறு தடைகளினால் இன்னும் நீண்டு செல்கின்றது.

இத்திட்டம் கொழும்பு வீதியில் மதுரங்குளி வரையும், கல்பிட்டி வீதியில் உலுக்காப்பலம் வரையும், அனுராதபுர வீதியில் சிறாம்பியடி வரையும், குருநாகல் வீதியில் கல்லடி- பாலாவி வரையும் விஸ்தரிக்க பட்டுள்ளது.

இதே போன்று ஒரு திட்டம் சிலாபத்திலும் செய்யப்படுகின்றது. அதற்கு அங்கே உள்ள தெதுறு ஓயாவிலிருந்து நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு விநியோகிக்க படுகின்றது.. புத்தள குடி நீர் திடடத்துக்கும் சிலாபத்துக்கும் எந்த சம்பந்தமில்லை எனினும் இவை ஒரே நேரம் ஆரம்பிக்கப்பட்டு குறித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த திட்டம் தேசிய நீர் வளங்கள் சபைக்கு சொந்தமானது. இத்திதிடம் அரசின் 20 % நிதியுடனும் ஆசிய அபிவிருத்தி வாங்கியின் 80% கடனுதவியுடனும் நடைபெறுகின்றது. இத்திடத்தின் குழாய் பாதிக்கும் வேலைகளை KDWA, Sierra என்ற இரு உள்நாட்டு நிறுவனங்களும், கலா வாவியினை திசை திருப்பல், நீர்தேக்கம் அமைக்கும் பணிகளை ஒரு இந்திய நிறுவனமும் செய்கின்றது…
இதன் முதற்கட்ட வேலைகளை இந்த வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

தற்போது நடைபெறும் குடிநீர் திட்டம் இணைப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் பாவனையாளர்களுக்கு தேவையான மேலதிக நீரை பெறுவதற்காகவே ஆரம்பிக்க பட்டது. எழுவன்குளத்திலிருந்து வரும் நீரை புதிதாக கட்டப்படும் நீர் தாங்கியில் சேமித்து புதிய பாவனையாளர்களுக்கு கொடுக்கவே ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனினும் புதிய பழைய பாவனையாளர்கள் மத்தியில் குழப்பங்கள் சமூக குழப்பங்கள் வரக்கூடும் எனும் எதிர்பார்ப்பில் பழைய தாங்கியும் புது தாங்கியும் ஒன்றாக இணைக்கப்பட்டு அனைவருக்கும் ஒரே தரத்தில் நீர் கொடுக்க தீர்மானிக்க பட்டுள்ளது. நீரின் தரம் தற்போது உள்ளதை விட சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய திட்டம் நிறைவுற்றதும் தற்போது நடைமுறையிலுள்ள புத்தளம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக நிறுத்தி அதனை புதிய தொழிநுட்பங்களிநூடாக நவீன மயப்படுத்தும் திட்டம்(Design) நிறைவு செய்யப்பட்டு அடுத்த கட்ட வேலைகள் நடைபெறுகின்றன என்பது மேலதிக தகவலாகும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All