Puttalam Online
regional-news

நழுவவிட்ட சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கும் இப்fலால் அமீன்..!

  • 14 October 2017
  • 912 views

எம்.எஸ். அப்பாஸ்

அரசியலுக்குள் கிருகப் பிரவேசத்துக்காக காத்திருக்கும் துடிப்புள்ள நகரத்து இளைஞர்கள் மத்தியில் ஒருவர்தான் இந்த இப்fலால் அமீன்.

அறிமுகம் தேவை இல்லை. எல்லோரும் அறிந்த முகம்தான். நேற்று ஒரு திருமண விருந்தில் அகஸ்மாத்தாக சந்தித்தபோது அவர் வெளியிட்ட கருத்து நமது மூத்த மக்கள் அந்த நாட்களில் ‌பாவித்த அநுபவ நினைவுகளை இலோசாகத் தட்டியது,

”கல்யாணத்தை முடித்துப்பார்
வீட்டைக் கட்டிப்பார்
இலெக்ஸனில் நின்று பார்….”

சவால்கள் நிறைந்தது என்ற அந்த நாள் அனுபவம்தான் இதுவெல்லாம். இப்fலால் வீட்டைக் கட்டிப் பார்த்துவிட்டாரோ தெரியாது ”இப்பபோது வயது சரி, கல்யாணமும் ஆகிவிட்டது, தேவையான அளவு படிப்பும் இருக்கிறது, வாழ்கை அனுபவமும் கொஞ்சம் இருக்கிறது….” என்ற தனது அரசியலுக்கான முதலீட்டில் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளார்.

இதற்கு முன்பு தனக்கு தனது Role Model கே.ஏ.பியால் தரப்பட்‌ட சந்தர்ப்பத்தை நழுவவிட்டதாகச் சொல்லும் இப்fலாப் எதிர்வரும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த இள வயது குடும்பஸ்தர் மலோசிய Limkocwing பல்கலைக் கழகத்தில் Event Management துறையில் இளமாணி ( சிறப்பு) பட்டம் பெற்றவர். சமகால நகர விவகாரங்களில் அடிக்கடி முநூல் பக்கங்களில் முகத்தைக் காட்டுகிறார்.

அரசியல் கிருகப் பிரவேசத்துக்குத் தயாராகும் இப்fலால் தனது Role Model ஐ விட்டுத் தூரப் போய் இப்போது மயில் அணியில்தான் இருக்கிறார். எந்த அணி என்பது முக்கியம் அல்ல. நகர ஆட்சிக்குத் தகுதியானவராக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் முக்கியம். நவீன மாற்றங்களைப் புரிந்து கொண்டு அவற்றோடு இணைந்து போகும் இளைஞர் சமுகத்து ஒரு அங்கம் என்பதால் சதாவும் கண்டு கண்டு புழித்துப் போய்விட்ட பழைய முகங்களைப் பிரதியீடு செய்ய பாக்கியதையும், யோக்கியதையும் உள்ள இளைஞர்கள் மத்தியில் இப்fலால் நகர அரசியலில் காத்திரமான பங்களிப்பைச் செய்யக் கூடும்.

“Everyone has the right to rise” இது கடந்த அமெரிக்க அதிபர் ஓட்டப் பந்தயத்தின் போது கேட்டது. அந்த வகையில் இப்fலாலுக்கும் கூட அந்த உயர்வுக்கான உரிமை இருக்கத்தானே வேண்டும். இது நியாமானதும் கூட . ஆனால் நான்கு பெண்கள் சகிதம் அடுத்த நகர சபையில் அமரப் போகும் பதினெட்டு மக்கள் பிரதிநிதிகளுக்கு மத்தியில் ஒருவராக இருக்க நகரம் குறிப்பாக நகர இளைஞர் சமுகம் தீர்மானிக்க வேண்டும். இளைஞர் என்று வரும்போது இப்லாலுக்கும் ஒரு கணிசமான இடம் இருப்பதை மறுதிலப்பதற்கில்லை.

வாட்ட சாட்டமான எடுப்பான உடற்கட்டமைப்பு, நவீன யுகத்து கருவிக் கையாட்சி, தொலை தொடர்பு நுட்பங்களில் நல்ல பரீச்சயம், மொழிகள் தடையே இல்லை இனி ‌ நகர விவகாரங்களில் தீர்மனம் எடுக்கும் சக்தியின் ஒரு அங்கமாக இருப்பதற்கு என்ன தடை..?

எண்பத்தைத்து வருட கால நீண்ட நடையின்போது இந்த City of Salt ”மாநகர இலக்கை” மிக அண்மித்துள்ள இந்தக் கால கட்டத்தில் அந்த இலக்கை நோக்கி எட்டுக்களை எட்டி வைத்து நடந்து கொடி மரத்தைத் தொட்டுவிட ஆழுமைமிக்க, நம்பிக்கையுள்ள, நெஞ்சுறுதி கொண்ட ஒரு இளைஞர் பட்டாளத்தின் தேவை எல்லாவற்றையும் விட மேலோங்கி நிற்கிறது.

இலக்குகளுடன் கூடிய, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உலகின் அடுத்த கோடியை ஒரு விரல் அசைவில் அடைந்து விடக் கூடிய ஆற்றல் உள்ள ஒரு இளம் சமுகத்தின் கையில் நகரத்தை ஒப்படைப்பதைப் பற்றி மட்டும்தான் நகர வாக்காளர்கள் சிந்திக்கக் வேண்டிய கடப்பாடு இருக்கிறது.

”தாருன்யயட ஹெட்ட” என்று இப்போதெல்லாம் நமது நாட்டில் கொஞ்சம் அதிகமாகவே பேசப்பட்டும், கேட்கப்பட்டும் வருகிறது. எனவே அந்த ” இளமைக்கான நாளை” எம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலில் பிரதி பலகிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

நகர நிருவாகத்துக்கான முன்னனுபவம் இப்லாலைப் பொறுத்தவரையில் பூச்சியத்துக்கு மிக நெருக்கமாக இருக்கலாம். ஆனால் நல்ல தொடக்கத்துடன் சேர்ந்து வரும் அனுபவம் நாளைய தலைமைத் துவத்தை நோக்கி அவரை உந்திச் செல்லும் சக்தியாக இருக்கலாம். அந்த உந்து சக்தியை சமுகம்தான் அவருக்குக் கொடுக்க வேண்டும்.

சதாவும் மலேரியா கால்வாயையும், வான் ரோட்டையும் வைத்துக் கொண்டு அரசியல் கும்மியடிக்கும் சமுகமாக இன்னும் நாம் இருக்க முடியாது. இங்க சவால்கள் இருக்கின்றன. நகர சபைக்குள் இப்போதெல்லாம் இனக் காழ்ப்புணர்வு தலைவிரித்தாடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் நம்மை வேததனைப்பட வைக்கின்றன.

இந்த விடயங்கள்தான் அடுத்த உள்ளுராட்சித் தேர்தலின் தொனிப் பொருளாக இருக்க வேண்டுமே அன்றி மயில் குஞ்சுகள், யானைக் குட்டிகள் என்று சிறுபிள்ளைத் தனமான கோசங்கள் புறத்தொதுக்கப்பட வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All