Puttalam Online
other-news

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி வட்டார குழுக்களுடனான கலந்துரையாடல் கூட்டம்

  • 15 October 2017
  • 420 views

(அகமட் எஸ். முகைடீன்)
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கல்முனைத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டார குழுக்களின் செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீட், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம். அப்துல் ரசாக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களான ரகுமத் மன்சூர், ஏ.சி. எஹியா கான், கல்முனை மசூரா குழுத் தலைவர் கரீம் ஹாஜியார், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியில் பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஏற்படுத்தப்பட்ட வட்டார குழுக்கள் தொடர்பான மீளாய்வும் எதிர்காலத்தில் அக்குழுக்களின் செயற்பாடு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் கல்முனை, சாய்ந்தமருது, இஸ்லாமபாத், மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் காணப்படும் வட்டார குழுக்களின் ஏற்பாட்டில் பிரதேச ரீதியிலான குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அவ்வப்பிரதேசங்களில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All