Puttalam Online
regional-news

புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்பப் பாடசாலையில் சித்திரக் கண்காட்சி

  • 17 October 2017
  • 578 views

ரூஸி சனூன்  புத்தளம்
புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்த சித்திரங்கள் மற்றும் புத்தக ஆக்கங்களை உள்ளடக்கிய கண்காட்சி நிகழ்வுகள் அண்மையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
தரம் 01 தொடக்கம் தரம் 05 வரைக்குமான மாணவர்களுக்கு தனித்தனியான தலைப்புகளில் சித்திரங்கள் வரையும் போட்டி நடைபெற்று அதன் மூலம் பெறப்பட்ட சித்திரங்கள் கண்காட்சியில் காட்சிப்பட்டிருந்தன.
பாடசாலை அதிபர் பெலஜியா அபுல் ஹுதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக புத்தளம் வலய கல்வி பணிமனையின் தமிழ் பிரிவுக்கான பிரதி கல்வி பணிப்பாளர் இஸட்.ஏ. சன்ஹீர், சித்திரப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் எம்.எம். முஹம்மது, ஆசிரிய ஆலோசகர் அருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறந்த சித்திரங்களாக கருதப்பட்ட சித்திரங்களில் 01ம் , 02ம், 03ம் இடங்களை பெற்ற சித்திரங்கள் அதிதிகளினால் தெரிவு செய்யப்பட்டதோடு ஆறுதல் பரிசுக்குரிய சித்திரங்களும் தெரிவு செய்யப்பட்டன.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All