Puttalam Online
education

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான முழு நாள் செயலமர்வு

  • 18 October 2017
  • 636 views

ரூஸி சனூன்  புத்தளம்

புத்தளம் மாவட்ட முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மன்றம் மற்றும் புத்தளம் நகர சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் புத்தளம் தொகுதிக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கான முழு நாள் செயலமர்வொன்று செவ்வாய்க்கிழமை (17) புத்தளம் சவீவபுரத்தில் அமைந்துள்ள முன்பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகார சபையின் புத்தளம் மாவட்ட மையத்தில் நடைபெற்றது.
புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச செயலகம் மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச செயலகம் ஆகிய பிரிவுகளுக்குட்பட்ட 150 க்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள மொழி மூல முன்பள்ளி ஆசிரியைகள் இந்த செயலமர்வில் கலந்து கொண்டனர்.
உபுல் மாமா என அழைக்கப்படும் தொலைக்காட்சி புகழ் உபுல் வீரசிங்க இதில் பிரதான வளவாளராக கலந்து கொண்டார். பூரண அனுசரணையை அங்கர் நிறுவனம் வழங்கி இருந்தது.
முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் கலை, கலாசார துறையினை மேம்படுத்தும் நோக்கில் உபுல் மாமாவினால் இந்நிகழ்வில் செயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
புத்தளம் மாவட்ட முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மன்ற பொறுப்பாளர் ரூபிக்கா தலைமையில் நடைபெற்ற செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், சிறுவர் கல்வி ஆலோசகர் இந்திக்க செனவிரத்ன, அங்கர் நிறுவன அதிகாரி பிரசாத் பீரிஸ், வாரியபொல முன்பள்ளி ஆசிரியை இமல்கா, வண்ணாத்திவில்லு பிரதேச முன்பள்ளி பொறுப்பாளர் புஞ்சி பண்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All