Puttalam Online
other-news

சுயாதீன குழு ஊடாகவே தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 3000 பேருக்கு இடமாற்றம்

10 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக தேசிய பாடசாலைகளில் கடமையாற்றிய 3000 ஆசிரியர்களுக்கு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.

353 தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் 37,000 ஆசிரியர்களில் சுமார் 12,000 பேர் ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றுவதாகவும் , இதனை அடிப்படையாகக் கொண்டு உயர்தர வகுப்புக்களுக்கான 3000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் ஜனவரி மாதம், தரம் ஒன்று தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புக்களில் கற்பிக்கும் 9000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் கல்வி அமைச்சினால் ஆசிரியர்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த இடமாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கமும், இலங்கை ஆசிரியர் சங்கமும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் சங்கங்களின் கருத்தை மறுத்துள்ள கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், சுயாதீன குழுவொன்றின் ஊடாகவே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

ANBU JAVAHASHA

2017.10.18 ஆம் திகதிய மவ்பிம தினசரியில்

ஒரு பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றப்பட மாட்டாது
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

2017.10.18ஆம் திகதிய தினமின தினசரியில்

ஆசிரியர் இடமாற்ற கொள்கைக்கு தடையாக இருப்பவர்களை பற்றி அதிபர்கள் கல்வி அமைச்சுக்கு அறிவியுங்கள்

 

2017.10.17ஆம் திகதி ரிவிர தினசரியில்

ஆசிரியர் இடமாற்ற முறைக்கு தடைபோடும் ஆசிரியர்,அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

 

2017.10.17 ஆம் திகதிய மவ்பிம தினசரியில்

ஜனவரி முதல் தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 9,000 பேர்களுக்கு இடமாற்றம்

2017.10.16 ஆம் திகதிய திவயின தினசரியில்

தேசிய பாடசாலைகளில் வேர் விட்டு இருந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கல்
கல்வி அமைச்சரின் துணிகர நடவடிக்கைக்கு பாராட்டு

 

VAT


One thought on “சுயாதீன குழு ஊடாகவே தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 3000 பேருக்கு இடமாற்றம்

  1. Gopinath says:

    தேசிய பாடசாலையில் 10வருட மேல்ஆசிரியர்களை இடமாற்றம் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All