Puttalam Online
regional-news

சாஹிராவில் போதை ஒழிப்பு தொடர்பிலான கருத்தரங்கு

  • 18 October 2017
  • 489 views

(ரிஜாஸ்-நமது நிருபர்)

சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்புக்களில் ஒன்றான ‘Z 14’ அமைப்பினால் போதை ஒழிப்பு தொடர்பிலான கருத்தரங்கு நேற்று (16-10-2017) அஸ்வர் மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

‘போதை இளமையை சீரழிக்கும்’ எனும் தொனிப்பொருளின் கீழ் நான்காம் கட்டமாக நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மொரட்டுவை மற்றும் பஹ்ரைன்  பல்கலைகழக கணணி ஆய்வாளரும், www.islahme.com இணையத்தளத்தின் ஸ்தாபகருமான எஸ்.ஏ.சீ.பீ. மரைக்கார் வளவாளராக கலந்து கொண்டார்.

Z14 சஹிரா பழைய மாணவர் அமைப்பினால் போதை இளமையை சீரழிக்கும் என்ற தொணிப்பொருளின் கீழ் இன்று 4ம் கட்ட நிகழ்வாக புத்தளம் சஹிரா தேசிய பாடசாலையில் நடைப்பெற்றது.

போதையினால் ஏற்படும் விபரீதங்களை சுவாரஷ்யமான முறையில் மாணவர்களுக்கு  மத்தியில் பகிர்ந்து கொண்ட அதேநேரம் பாடசாலை ஆசிரியர்களும் இந் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All