Puttalam Online
sports

சாஹிராவின் சாதனையை கொண்டாடும் ஊர்வலம்.!!!

  • 18 October 2017
  • 95 views

கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் சாஹிரா கல்லூரி மாணவன் அப்ரித் உயரம் பாய்தல் போட்டியில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று சாஹிராவின் பெயரை மாத்திரமல்லாது வடமேல் மாகாணத்தையே பெருமைபடுத்தியுள்ளார். இது சாஹிராவின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு சாதனையாகும். சாஹிராவின் வரலாற்றில் உயரம் பாய்தலில் அகில இலங்கை மட்டத்தில் கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.

இந்த சாதனையை கொண்டாடும் முகமாக ஊர்வலம் ஒன்றை பாடசாலை நிர்வாகம், பழைய மாணவர் சங்கம், பெற்றார் சங்கம், அபிவிருத்தி குழு மற்றும் சில பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) அன்று காலை 9 மணிக்கு தபால் நிலைய சந்திக்கு அருகாமையில் இருந்து இந்த ஊர்வலம் ஆரம்பமாகும். பிரதான பாதை ஊடாக பிரதான சுற்றுவட்டத்தை அடைந்து பின்னர் மன்னார் வீதி ஊடாக சாஹிரா கல்லூரியின் பிரதான வாயிலிற்கு அருகாமையில் நிறைவு பெரும். இறுதி நிகழ்வு பாடசாலை பிரதான மண்டபமான அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

கல்லூரி பழைய மாணவர்களே, பெற்றார்களே மற்றும் நலன் விரும்பிகளே . இது சாஹிராவின் கொண்டாட்டம், சாஹிராவின் பெயரை அகில இலங்கை ரீதியில் உயர்த்திய சாதனை வீரனை பாராட்டவேண்டிய தருணம். ஆகவே உங்கள் அணைவரினதும் வருகையை ஏற்பட்டு குழு எதிர்பார்த்த வண்ணம் இந்த நற்செய்தியை உங்களுடன் பகிர்கிறது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All