Puttalam Online
politics

மாற்றமானது எமது ஊரில் இருந்து துடங்கட்டும்..!

  • 25 October 2017
  • 53 views

(Anfath Hifans)

69 ஆண்டுகளுக்கு முன்னாள் இதே மாதம் இதே நாள் இலங்கையின் ஒரு மூலையில் ஓர் உயிர் உதித்தது. அவ்வுயிர் ஆனது முஸ்லிம் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கொடுமைகளுக்கும் அரசியல் உரிமைகளுக்கும் குரல் கொடுத்து ஒரு மாமனிதனாக தோற்றம் பெற்றது.
நாளடைவில் அம்மாமனிதர் அனைவரின் உள்ளங்களில் இடம் பிடித்தார். அவர் தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் M.H.M.Ashraff அவர்களாகும் .

இவர் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை. ஒரு தலைவன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் முன்மாதிரி ஆகும்.

முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக பாடுபட்ட இம்மனிதரின் கனவுகள் சிந்தனைகள் இன்று சின்னாபின்னமாக சிதறடிக்கப்பட்டு கிடக்கிறது. கட்சி இன்னும் உயிர் வாழ்கிறது. ஆனால் கட்சிக்குள் பெயரடைவில் தலைவர்களாகவும் அநியாயத்துக்கு குரல் கொடுக்காமல் முகத்தை திருப்பிக்கொள்பவர்களாகவே உலாவருகிறார்கள்.
அவலம் அத்தியாகியின் மறைவிற்கான உண்மையான நிலையை கூட இதுவரையும் கண்டுபிக்கக்கூட முன்னுவராத முயற்சிக்காத தன்மை கவலையை தருகிறது .

மறைந்து 17 ஆண்டுகள் கழித்தும் 3 அரசாங்கங்கள் மாறியும் இன்றுவரை ஹெலியின் கறுப்புப்பெட்டியை தேடும் மந்தமான அரசாங்கத்தின் நிலையை கண்டு சிரிப்பதா அல்லது வெக்கப்படுவதா ??
இதுவரை புலனாய்வுத்துறையினரால் மரணத்திற்கான காரணம் கொடுக்க படவில்லை. அவரின் மரணத்தில் அரசாங்கத்தின் சதியோ, LLTE யின் சூழிச்சியோ அல்லது ஹெலியின் இயந்திர கோளாறோ யாவரும் அறியா மர்மம் தொடர்கிறது.

புத்தளம் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப வழி செய்தவர் இவர் . இவருக்கு எமது சமூகம் என்ன செய்தது .??
பிறநாடுகளில் பிறவூர்களில் நடக்கும் அநியாயத்துக்கு பெட்டிஷன் போடும் எமது சமூகம் இவரின் மரணத்தினை கண்டறிய தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உண்மையான மரணத்தின் காரணத்தை அறிந்து கொள்ள விரும்புவது இல்ல ஏன் ??

ஆட்டு மந்தைகள் போன்று சிதறி கிடந்தது போதும் ஓநாய்களும் எம்மை கொன்று திண்டது போதும். ஒன்று படுவோம் சகோதரர்களே. அனைவரும் சேர்ந்து கண்ணடறிவோம் உண்மையான காரணத்தை…

சிறந்த ஆளுமையுடைய தலைவர்கள் எமது ஊரிலும் இருக்கின்றார். மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் விட்டு சென்ற தனிமைத்துவமான அரசியலை அனைவரும் சேர்ந்து ஒன்று திரண்டு கட்டி எழுப்புங்கள்.

அன்று கிழக்கில் இருந்து உதித்தது சூரியன். இனிமேல் எமது ஊரில் இருந்து உதிக்கட்டும். மாற்றமானது எமது ஊரில் இருந்து துடங்கட்டும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All