Puttalam Online
regional-news

மாதாந்த ஈமானிய ஒன்றுக்கூடல் – ஒக்டோபர்

  • 29 October 2017
  • 161 views

கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பினால் மாதந்தோறும் ஒழுங்கு செய்யப்படும் ஈமானிய ஒன்றுக்கூடல் நேற்று முன்தினம் (27-10-2017) முர்ரா மஸ்ஜிதில் நடைபெற்றது.

அஷேய்க் எம்.எச்.எம்.உஷைர் (இஸ்லாஹி) வளவாளராக கலந்து கொண்ட இவ்வொன்று கூடலில் அமைப்பின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட ஏனையோரும் கலந்து கொண்டனர்.

“எங்கிருந்தாலும் திக்ர் உடனான தொடர்பை பேண வேண்டும். தொழிலுக்கு வந்து இருக்கும் இந்நாட்டிலிருந்தாலும், எமது நாட்டிலிருந்தாலும் அங்கே திக்ர் உடைய சூழலை உருவாக்கி கொள்வது இன்றியமையாததாகும்.

வறுமையான சூழல், ஆபாச சூழல், அரசியல் அராஜகமற்ற சூழல் ஆகியன திக்ரை விட்டு தூரமாக்கும் காரணிகளாகும் ” போன்ற விடயங்கள் உரையின் சாராம்சமாக அமைந்திருந்தமை குறிப்பிடதக்கது.

(PAQ – Islamic Unit)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All