Puttalam Online
ladies

சவுதி பெண்களுக்கு மன்னர் முஹமட் சல்மான் அனுமதி

2018 ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவிலுள்ள விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர அந்நாட்டு அரசாங்கம் முதன்முறையாக அனுமதி வழங்கியுள்ளது.

விளையாட்டு நிகழ்வுகளைக் கண்டுகளிப்பதற்காக ரீயாட், ஜெட்டா மற்றும் டமாம் ஆகிய நகரங்களிலுள்ள அரங்குகளினுள் பெண்கள் தங்கள் குடும்பத்தவர்களுடன் வருதை தரமுடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவுதியிலுள்ள  பெண்கள் வாகனங்கள் செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த நடைமுறையும் அமுலுக்கு வரவுள்ளது.

சவுதி மன்னர் முஹமட் பின் சல்மான் பொருளாதாரத்தை உயர்த்தவும், சவுதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் செயற்பட்டு க்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


One thought on “சவுதி பெண்களுக்கு மன்னர் முஹமட் சல்மான் அனுமதி

  1. Mohamed SR Nisthar says:

    அஹிய்! என்னா எங்கள கையூட்டிங்க மாதி ஈக்கிது. 31 .12 . 2017 வரய்க்கோம் ஹராமான எல்லாத்தையோம் ஹலால் ஆக்கி உங்கள நம்புன எல்லாரையோம் ஏமாத்திட்டிங்க. ஆனா நாங்க இவ்லோவ் காலமா ஒரு “டெக்னீக்” கா விசயத்த கொண்டு போனோம் அது ஒங்களுக்கு தெரியாது ஆஹிய், அது என்னாண்டா நாங்க பொம்புள புள்ளைவொல எங்கயோம் தனியா அனுப்பாம்ம அப்படி போறது ஹாரம் எண்டு சொல்லி பயங்காட்டி வச்சோம், ஆனா ரேஸ் தரவய் க்கு போறது மாத்திரம் ஹலாளுண்டு சொல்லி ஒருமாதி காலத்தை கடத்திடோம். ஆனா நீங்க இப்ப எங்கட ராத்தாமார தொறந்துவுட்டதால எங்களுக்கு பெரச்சின. அதால எங்கட ஸ்டேடியத்திலோம் பொடவைவொல கட்டி மறச்சி பொம்புள்ள புள்ளைவொளுக்கு எடம் ஒதுக்கி ஈக்கிறோம். வேனுமுண்டா வந்து பாத்துட்டுபோங்க. இன்னோம் 20 வருசத்துல எதையோம் ஹலாலாக்கிறதா இருந்தா அத இப்பவே ஹலாலாக்குங்க. இல்லாட்டி எடையில் அம்பிடுற ராதா தங்கச்சி மார் பாவம் இல்யா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All