Puttalam Online
current

சனிக்கிழமை (11) புத்தளம் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம்..!

  • 8 November 2017
  • 849 views

– #A DengueFreePuttalam-

கடந்த சில தினங்களாக புத்தளம் நகரமே டெங்கு நோயின் கொடூரத்தால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறுவர்களும் கற்பினி தாய்மார்களுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் மட்டும் புத்தளம் MOH எல்லைக்குள் சுமார் 250 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சடுதியான அதிகரிப்பு ஆகும்.

நவம்பர் மாத முதல் வாரத்தில் மட்டும் 50 இற்கும் மேற்பட்டோர் இதுவரை இனம் காணப்படுள்ளனர். இரு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள் யாவும் நோயாளர்களால் நிறைந்து வழிகின்றன.

வைத்தியசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக ஒரு கட்டிலில் 3 பேர் வரை இருக்கவேண்டிய நிலைமையில் காணப்படுகிறது புத்தளம் தல வைத்தியசாலை. சில நோயாளிகள் தரையிளும் இருக்கவேண்டிய நிலைமையும் காணப்படுகிறது.

இவற்றை கருத்தில் கொண்டு புத்தளம் பெரிய பள்ளிவாயில் மற்றும் உலமா சபை தலைமையில், புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், புத்தளம் மாவட்ட காரியாலயம், புத்தளம் பிரதேச செயலகம், புத்தளம் நகர சபை, போலிஸ், முப்படை மற்றும் இன்னோரென்ன சிவில் அமைப்புகள் சேர்ந்து இன்று மாவட்ட அதிகாரி உடனான சந்திப்பின் பின் எதிர்வரும் சனிக்கிழமை (11) ஐ உத்தியோகபூர்வ டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்த தீர்மானித்துள்ளனர்.

இத்தினத்தில் முழு புத்தளம் நகரமும் தழுவிய வகையில் சிரமதான பணிகள் நடைபெறும். இதற்கு ஊர் மக்கள், முப்படைகளின் பங்களிப்பு பெறப்படும். மேலும் விசேடமாக வீடுகளுக்குளும் வெளியேயும் டெங்கு நுளம்பு முட்டையிட கூடிய முக்கிய இடங்களை விசேடமாக சோதனைக்குள்ளாக்க  திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பொது சுகாதார பரிசோதகர் (PHI) இன் வழிகாட்டல். இதே நேரத்தில் மக்களுக்கான தெளிவூட்டல்களும் வழங்கப்பட உள்ளன.

இது இவ்வாறிருக்க ஊரின் அரசியல் வாதிகளும் வைத்தியசாலையில் உடனடியாக நிவர்த்தி செய்ய்வேண்டிய பற்றாக்குறைகளை அரசியல் மட்டங்களில் முன்வைத்து அவர்களால் முடியுமான முயற்சிகளை செய்கின்றனர். இது பாராட்டத்தக்கது.

இவ்வூர் தழுவிய டெங்கு ஒழிப்பு செயல்திட்டத்தை பெரியபள்ளி தலைமை ஏற்று நடாத்துவதோடு சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் குழுக்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. இதில் Youth Vision 98 அமைப்பு அதிக ஆர்வம் காட்டினர்.

ஆகவே பொது மக்களே சனிக்கிழமை நடைபெற உள்ள டெங்கு ஒழிப்பு நிகழ்வுக்கு உங்களின் அதி உயர் பங்களிப்பை வழங்குவதோடு இந்த விடயத்தை மற்றவர்களுக்கும் எத்திவையுங்கள்.

டெங்கு நோயின் கொடூரத்தில் இருந்து பாதுகாப்பு பெற நம் சுற்று சூழலை நாமே சுத்தமக்குவோம் என்ற தொனிப்பொருளில் சுற்று புற சூழலை துப்பரவு செய்வோம்.

இதில் மிக முக்கியமான விடயம் சிரமதானம் என்றவுடன் வெறுமனே மரங்களை வெட்டி வீதியில் போடுவது, கூளங்களை சேர்த்து நெருப்பு வைப்பதோடு மட்டும் நின்று விடாமல் டெங்கு நுளம்பு பெருககூடிய இடங்களை இனம்கண்டு அவற்றை முறையாக அப்புறப்படுத்துங்கள்.

இதற்கான வழிகாட்டல் மிக விரைவில் உங்களை வந்தடையும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All