Puttalam Online
politics

“நமது மக்களுக்கு விசுவாசமான, நேர்மையான அரசியல் சக்தியொன்றை கட்டியெழுப்ப முன்வாருங்கள்”

  • 10 November 2017
  • 467 views

(NFGG ஊடகப் பிரிவு)

“முஸ்லிம் சமூக அரசியல் களத்தில் காணப்படும் அரசியல் சக்திகள் மீதான நம்பிக்கையை முற்றுமுழுதாக மக்கள் இழந்து விட்டனர். முஸ்லிம் அரசியல் கட்சிகளின் அண்மைக்கால செயற்பாடுகள் அவர்களை முஸ்லிம் சமூகம் இனிமேலும் நம்ப முடியாது என்பதை நிரூபித்திருக்கிறன. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினை பலமிக்க சக்தியாகக் கட்டியெழுப்புவதே நமக்கிருக்கின்ற ஒரே தெரிவாகும்.  முற்போக்கான, நேர்மையான, நீதியான , முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த அரசியலை எதிர்பார்க்கும் அனைவரையும் எமது பயணத்தில் இணைந்து கொள்ள முன்வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறோம்” என NFGGயினர் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 06.11.2017 அன்று காத்தான்குடியில் NFGG நடாத்திய விசேட பத்திரிகையாளர் மகாநாட்டின்போதே NFGGயின் தவிசாளர் இவ்வாறுதெரிவித்தார்.

பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

“முஸ்லிம் சமூக அரசியல் களத்தில் காணப்படும் அரசியல் சக்திகள் மீதான நம்பிக்கையை முற்றுமுழுதாக மக்கள் இழந்து விட்டனர். முஸ்லிம்அரசியல் கட்சிகளின் அண்மைக்கால செயற்பாடுகள் அவர்களை முஸ்லிம் சமூகம் இனிமேலும் நம்ப முடியாது என்பதைநிரூபித்திருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மக்களுக்கு விசுவாசமான அரசியல் சக்தியொன்றை கட்டியெழுப்பவேண்டியதன்அவசியத்தை உணர்ந்தே 11 வருடங்களுக்கு முன்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை நாம் ஸ்தாபித்தோம். கொள்கைவாத, நாகரீகமுற்போக்கு அரசியல் நடை முறைகளை நாம் உறுதியாக செயற்படுத்திக் காட்டியுள்ளோம். இதன் காரணமாகவே எங்கள் மீது  மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கடந்த 2015 இல் இன்றைய ஜனாதிபதியை ஆட்சிக்குகொண்டுவர பொது எதிரணியை உருவாக்கும் முதல் முஸ்லிம் தரப்பாக நாம் இருந்தோம்.தேசிய அரசியலுக்கு புது இரத்தம் பாய்ச்சிய எமது பிரவேசம் பெரிதும் மாறுபட்டதே. இதனால், பல பகுதிகளிலிருந்தும் எமக்கான ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

நாம் 2006 ஆம் ஆண்டு எமது அரசியல் வேலைத்திட்டங்களை மிகச் சிறிய அளவிலேயே காத்தான்குடியில் ஆரம்பித்தோம். 2006 ஆம் ஆண்டுஉள்ளூராட்சி தேர்தலில் 3200 வாக்குகளை பெற்று காத்தான்குடி நகரசபையில் ஒரு ஆசனத்தை பெற்றோம். ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டஎதிர்கட்சியாக நாம் இருந்த போதிலும்,  திட்டமிட்ட முற்போக்கான அபிவிருத்திகளையும் நாம் காத்தான்குடியில் செய்து காட்டினோம்.  அத்தோடு தேர்தல் காலங்களில் நாம் மக்கள் முன்வைத்த கொள்கைகளையும் அமுல்படுத்திக் காட்டியுள்ளோம்.இதனால் அடுத்து வந்த 2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் எமக்கான ஆதரவு  இரண்டு மடங்கை விடவும் அதிகமானது.கிட்டத்தட்ட 7000 வாக்குகளுடன் இரண்டு ஆரனத்தை பெற்றுஎமது அரசியல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தினோம். காத்தான்குடியில் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் கிடந்த பிரச்சினைகளுக்கான விஞ்ஞான பூர்வமான தீர்வுகளை முன்வைத்து மக்களின் நம்பிக்கையை வென்றோம்.

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட12,500 வாக்குகளையும் திருகோணமலை மாவட்டத்தில் 14,500வாக்குகளையும் பெற முடிந்தது. இவ்வாறு எம்மீது நம்பிக்கை கொண்டு மக்கள் அணியணியாக இணைந்து கொள்வதுபோல், பல அரசியல் தலைமைகளும் , பொரும்பான்மை அரசியல்கட்சிகளும் உள்ளூராட்சி தேர்தலுக்காக எம்மோடு கூட்டணி அமைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தனித்து போட்டியிடுமாறு ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நாம்களவிஜயங்களை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் தனித்து போட்டியிடுவதற்கு சாதகமான சூழல் குறித்து ஆராய்ந்துள்ளோம்.

 அந்தவகையில் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் உள்ளூராட்சி சபைகளுக்காக போட்டியிடுவது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி நகரசபை, ஆரயம்பதி பிரதேச சபை, மட்டக்களப்பு மாநகரசபை,  ஏறாவூர் மற்றும் கல்குடா பிரதேசஉள்ளூராட்சி சபைகளிலும், அம்பாறை மாவட்டத்தில், அக்கரைப்பற்று, பொத்துவில், கல்முனை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளிலும்திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கிண்ணியா, கந்தளாய், முள்ளிப்பொத்தானை , குச்சவளி மற்றும் திருகோணமலை நகர்உள்ளிட்டஉள்ளூராட்சசைபைகளிலும் போட்டியிட திட்டமிட்டிருக்கிறோம்.

கிழக்கு மாகாணத்திற்கு வெளியே,கொழும்பு மாநகர சபை,  முசலி பிரதேச சபை மற்றும் அத்தனகல்ல பிரதேச சபை போன்றவற்றிலும் போட்டியிட தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் சமூகத்தை தளமாகக் கொண்டு, நேர்மையான மக்களுக்கு விசுவாசமான அரசியல் சக்தியொன்றை கட்டியெழுப்ப வேண்டியது கட்டாயமான சமூகக் கடமையாக மாறியுள்ளது.  இதற்கான உறுதியான அத்திவாரத்தையே இத்தனை காலமாக நாம் இட்டிருக்கிறோம்.

பாரம்பரிய அனைத்து அரசியல் சக்திகள் மீதான நம்பிக்கை அடியோடு இல்லாமல் போயுள்ள சூழ்நிலையில் , நல்லாட்சிக்கான தேசியமுன்னணியினை பலமிக்க சக்தியாகக் கட்டியெழுப்புவதே நமக்கிருக்கின்ற ஒரே தெரிவாகும். எனவே, முற்போக்கான, நேர்மையான, முழுக்கமுழுக்க மக்கள் நலன் சார்ந்த அரசியலை எதிர்பார்க்கும் அனைவரையும் எமது பயணத்தில் இணைந்து கொள்ள முன்வருமாறு பகிரங்கமாகஅழைப்பு விடுக்கிறோம்.

 கொள்கை ரீதியில் ஒன்றிணையும் அணைவருக்கும் கதவு திறந்திருக்கிறது. இங்கு பதவிகள் யாருக்கும் சொந்தமானதுமல்ல;  நிரந்தரமானதுமல்ல. காலா காலத்துக்கும் பதவியில் இருப்பவர்கள் அவ்வாறு அமர்ந்திருக்க முடியாது.  அந்த வகையில் தவிசாளர் பதவி உட்பட சகல பதவி நிலைகளிலும் இன்னும் சில மாதங்களில்மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதிலும்கூட முன்மாதிரிகளை ஏற்படுத்தவே நாம் உறுதி கொண்டுள்ளோம்.

எனவே, மக்களுக்கு விசுவாசமான அரசியல் கட்சியாக தன்னை நிரூபித்துக் காட்டியள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினை மேலும்பலப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல அனைவரும் முன்வர வேண்டும்.”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All