Puttalam Online
regional-news

ஊரையும் உயிர்களையும் காப்போம்., டெங்குவை ஒழிப்போம்..!

  • 10 November 2017
  • 510 views

(Anfath Hifans)

எம்மையும் எமது ஊரையும் ஆட்டி படைத்து குருதியை குடிபதுடன் நிறுத்தாது உயிர்களையும் குடிக்கும் உயிர்கொல்லியான ” டெங்கு ” பற்றி யாரும் அறியாமல் இல்லை.

ஒவ்வொரு வருடமும் மழைக்காலம் வந்தால் மண்வாசனை உணர்வதை விட இந்த நுளம்பினால் உடலில் ஏற்படும் வலியை உணர்ததே அதிகம் எனலாம்.

நாட்கள் செல்ல செல்ல நோயாளிகளின் எண்ணிக்கை கூடுவதுடன் உயிர் பிழைப்போமா அல்லது கண் மூடிவிடுவோமா என்ற பயத்தினால் தினம் தினம் உறைந்து விடுகிறோம்.

ஈவிரக்கம் இன்றி உயிர் பறிக்கும் இந்நோயானது பச்சிளம் குழந்தை முதல் பொல்லோண்டும் முதியவர்கள் வரை பதம் பார்கிறது.

பொருத்தது போதும், உயிர்களை காவுகொண்டது போதும், இக்கொடியவனின் பிடியில் இருந்து எமது ஊரையும் உயிர்களையும் பாதுக்காக நாளை ஊர் தழுவிய ரீதியில் ” டெங்கு ஒழிப்பு தினம் ” ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊரில் உள்ள அனைத்து டெங்கு பரவும் இடங்களும் முற்றாக ஒழிக்கப்பட பெரிய பள்ளியின் ஏற்பாட்டில் மாபெரும் ஊர் தழுவிய ஊர் மக்களை கொண்ட சிரமதானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 7 மணிமுதல் ஆரம்பிக்கும் இச்சிரமதானத்தில் ஊரில் உள்ள அனைத்து மக்களும் தமது சமூக பொறுப்பை உணர்ந்து ஊருக்காக உங்களின் கால நேரங்களை கொடுத்து இம்மாபெறும் ஊர் தழுவிய சிரமதானத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று வேண்டிகொள்ளபடுகின்றனர்.

எனது வீடு சுத்தமாக இருக்கிறது நான் ஏன் பங்கு கொள்ளவேண்டும் என்ற சுயநல குணம் கொண்டு யோசிப்பதை நிறுத்திவிட்டு களத்தில் குதிக்க முயற்சி செய்யுங்கள். பிரவீட்டில் பிறந்த டெங்கு கருணை கொண்டு அவீட்டில் மட்டும் உயிர் குடிக்காது.

உயிர்கொல்லியை ஊரைவிட்டு விரட்டி அடித்து ஊரையும் உயிர்களையும் காப்போம். டெங்குவை ஒழிப்போம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All