Puttalam Online
other-news

தெஹியத்தகண்டி பாடசாலைகளுக்கு கடின பந்து ஆடுகள விரிப்புகள் வழங்கிவைப்பு

(அகமட் எஸ். முகைடீன்)
தெஹியத்தகண்டி தேசிய பாடசாலை, சூரியபொக்குன இரண்டாம் நிலை பாடசாலை மற்றும் மெதகம இரண்டாம் நிலை பாடசாலை என்பவற்றிக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் கடின பந்து ஆடுகள விரிப்பு வழங்கிவைக்கும் நிகழ்வுகள் நேற்று (10) வெள்ளிக்கிழமை குறித்த பாடசாலைகளில் நடைபெற்றன.
தெஹியத்தகண்டி தேசிய பாடசாலை உதவி அதிபர் புஸ்பகுமார, சூரியபொக்குன இரண்டாம் நிலை பாடசாலை அதிபர் மைத்திரிபால, மெதகம இரண்டாம் நிலை பாடசாலை அதிபர் ஆர்.எம். சயிந்த ஆகியோரின் தமைகளில் வௌ;வேறு நிகழ்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வுகளில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் அம்பாறை மாவட்ட சிங்கள பிரதேசங்களுக்கான இணைப்பாளர் எம்.எஸ்.எம். ரஊப், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெஹியத்தகண்டிய பிரதேச செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாளைகளில் கடின பந்து கிறிக்கெட் விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் பெறுமதிவாய்ந்த கடின பந்து ஆடுகள விரிப்புகள் பிரதி அமைச்சரினால் குறித்த பாடசாலை நிர்வாகங்களிடம் கையளிக்கப்பட்டன.
VAT
 


One thought on “தெஹியத்தகண்டி பாடசாலைகளுக்கு கடின பந்து ஆடுகள விரிப்புகள் வழங்கிவைப்பு

  1. Rizan Ahmed says:

    புத்தளம் ஸாஹிராவில் நான்கு விளையாட்டு ஆசிரியர்கள் இருந்தும் இதுவரை ஒரு கடினப்பந்து கழகத்தை உருவாகவில்லை. இது மாணவர்களுக்கு செய்கின்ற பெரும் அநியாயம்.

    இந்த விடயத்தில் புத்தளம் Lakers Cricket கழகத்தின் பனி மகத்தானது. பாடசாலை, இனம், மதம் பேதமின்றி அனைவரையும் உள்வாங்கி U13 , U19 மற்றும் Senior அணிகளை உருவாக்கி முன்னேற்றப்பாதையில் பயணிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All