Puttalam Online
regional-news

ஸாஹிரா பழைய மாணவர் அமைப்பான Syndicate95 இன் 2017 ம் ஆண்டுக்கான ஒன்றுகூடல்

  • 12 November 2017
  • 585 views

ஸாஹிரா பழைய மாணவர் அமைப்பான Syndicate95 தம் நண்பர்களுக்கான ஒன்றுகூடலை கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி DC பூலில் நடாத்தினர். தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமான இப்பெருநாள் ஒன்றுகூடல் மஃரிப் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமானது. இதன் போது கடந்த நான்கு  வருடங்களில் Syndicate95 குழுவினரால் செய்யப்பட்ட அனைத்து சமூகநல  செயற்திட்டங்கள், தனி நபர் உதவிகள் பற்றிய விபரங்கள், கணக்கறிக்கை என்பன நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களால் நண்பர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டன.  அதனைத் தொடர்ந்து நண்பர்களுக்கிடையில் கால்பந்தாட்ட போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. மற்றைய  பொழுதுபோக்கு விடயங்களை தொடர்ந்து இராப்போசனம் அருந்தி  நண்பர்கள் விடைபெற்றனர்.
2013ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட Syndicate95 அமைப்பு அல்லாஹ்வின் அருளால்  பல சவால்களுக்கு முகம்கொடுத்து நான்கு வருடங்களை கடந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பல சமூக நலன் விரும்பிகளினதும் Syndicate95 உறுப்பினர்களினதும் நிதிப்பங்களிப்பின் மூலமும் அயராத உழைப்பின் மூலமுமே இச்செயற்திட்டங்கள் சாத்தியமாகியமை விதந்துரைக்கத்தக்கது. அண்மையில் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுக்கிடையில் நிகழ்ந்த நிர்வாக மீளமைப்பின் போது பின்வருவோர் பிரதான பதவி தாங்குனர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் – A.M மிஹ்லார் முஹம்மத் 0772354861
செயலாளர் – A.A முஹம்மத் அஸீர் 0710821820
பொருளாளர் – J.M ஹஸ்ரி 0714866640
புதிய நிர்வாக மீளமைப்பின் பின்னர் தெரிவு செய்யப்பட மிஹ்லார் முஹம்மத் தலைமையிலான Syndicate95 நிறைவேற்றுக்குழு பின்வரும் பிரதான தீர்மானங்களை தங்களின் நிர்வாக ஒன்றுகூடலில் நிறைவேற்றியது.
– Syndicate95 நிறைவேற்றுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட Syndicate95 முன்னெடுப்புக்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் உறுப்பினர்கள் மத்தியில் Syndicate95 (Official) WhatsApp ஊடாகவே பகிரப்படும்.
– Syndicate95 அமைப்பினர் கலந்து கொள்ளும் எந்த பொது நிகழ்வுகளுக்குமான அல்லது பொது செயற்பாடுகளுக்குமான  தொடர்பாடல்கள் மற்றும் தகவல் பரிமாற்றம்  தலைவர் A.M மிஹ்லார் முஹம்மதால்  அல்லது செயலாளர் A.A முஹம்மத் அஸீரால் மட்டுமே மேட்கொள்ளப்படும்.
– Syndicate95 அமைப்பினரின் செயட்திட்டங்களுக்கான நிதி சேகரிப்புக்கள் அனைத்தும் உத்தியோகபூர்வ வங்கிக்கணக்கின் மூலம்  அல்லது பற்றுச்சீட்டு வழங்கப்படுவதன் மூலம் மட்டுமே செய்யப்படும்.
மேட்படி தீர்மானங்களை அன்புடன் கவனத்தில் கொள்ளுமாறு அங்கத்தவர்களையும் பொது மக்களையும் Syndicate95 நிறைவேற்றுக்குழு வினயமாக வேண்டிக்கொள்கின்றது. புத்தளத்தில் எமது அமைப்பு Syndicate95 என்ற பெயரில் மாத்திரமே செயற்படுகிறது என்பதையும் இதே போன்ற வேறு பெயர்களில்  செயட்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். பொது செயற்பாடுகள் நன்கொடை சேகரிப்புக்களின் போது எமது பெயர் Syndicate95 என்று மாத்திரமே பயன்படுத்தப்படும் என்பதனை கவனத்தில் கொள்ளுமாறு  எம் அங்கத்தவர்களையும் பொது மக்களையும் அன்பாக  கேட்டுக்கொள்கிறோம். கடந்த காலத்தில் போல் எதிர்காலத்திலும் ஒருங்கிணைக்கப்பட்ட வினைத்திறனான பொதுநலத்திட்டங்களை செய்வதற்கு Syndicate95 நிறைவேற்றுக்குழு திடசங்கற்பம் பூண்டுள்ளது.
Syndicate95 நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள்:
Dr. மில்ஹான் பாரிஸ்
இம்தாத் பசர்
அலி பிஸ்ரி
ஷிராஜ் ஹுசைன்
முஹம்மத் சிஹான்
முஹம்மத் நஜாத்
வசீம் ரிப்தி
முஹம்மத் முனாஸ்
முஹம்மத் பதீன்
முஹம்மத் அஸீம்
மத்தியகிழக்கு பிரதிநிதிகள்
Engr.ருஷ்டி அஹ்மத்
Engr.முஹம்மத் ரிமாஸ்
தகவல்.
Syndicate95 செயலாளர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All