Puttalam Online
regional-news

PULSED இன் 7வது வருடாந்த பொதுக்கூட்டம்

  • 14 November 2017
  • 230 views

Puttalam Union for Literacy, Social and Environmental Development (PULSED) இன் 2016/2017 ஆம் ஆண்டுக்கான 7ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்   28.10.2017 அன்று Hallam City College இன் கேட்போர் கூடத்தில் நடைபெற்று முடிந்தது.

இதன் புதிய செயற்குழு உறுப்பினர்களாக M.T.ரினாஸ் முஹம்மத் (தலைவர்),  M.T.M. அஸாம் (உப தலைவர்),  ஆசிரியர் செய்யத் அஹ்மத் (செயலாளர்), M.R.M.ஜாயீஸ்  (பொருளாளர்), S.M.M.ஹஸீபுல்லாஹ்  (ஒருங்கமைப்பாளர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் போது கடந்த ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கையும், செலவீன விபரங்களும் விபரிக்கப்பட்டதோடு எதிர்காலத்தில்  PULSED இன் பணியின் பரவலாக்கம் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

PULSED ஆனது 2001 O/L  மற்றும் 2004 A/L  எழுதிய ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களை மையமாக கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஒரு பழைய மாணவர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All