Puttalam Online
current

தில்லையடியிலும் கடையடைப்பு – ஊர்தழுவிய டெங்கு ஒழிப்புக்கான அழைப்பு..!

  • 16 November 2017
  • 213 views

தில்லையடி வாழ் அணைத்து உடன்பிறப்புகளுக்கும்..!

உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் தொடக்கம் அணைத்து உறவுகளிடமும் இந்தச் செய்தியை பகிர்ந்துகொள்ளுமாறு தில்லையடி மொஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித் சார்பாக வேண்டுகிறேன்.

ஊர்தழுவிய ஒரு நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.! (2017.11.18- சனிக்கிழமை )

ஒரே நாளில்,
# முழு ஊர் தழுவிய சுத்திகரிப்பு…
#தில்லையடியின் அனைத்து கடைகளையும் மூடி இப்பணியை செய்ய முயற்சித்தல்.
# தில்லையடியின் அனைத்து, நிறுவனங்கள், வீடுகளுக்கும் சென்று, அவதானித்து, அறிவுறுத்தி, அசுத்தம் அழிக்கும் பணி..
# டெங்கு விளைகின்ற கைவிடப்பட்ட காணிகள், நீண்ட நாள் மூடியிருக்கும் வீடுகள் இதர பகுதிகளுக்கெதிரான சட்ட நடவடிக்கை…
# குடம்பி, கூட்டுப்புழுக்களை ஆங்காங்கே அழிக்கும் புகையடித்தல்…
# மூடப்படாத கிணறுகள், நீர்தாங்கிகளுக்கு Net அடித்தல்…
# தேவைப்படும் இடங்களுக்கு (Guppy – fish) மீனிடுதல்..
# டெங்கு உற்பத்தியாகும் உள்வீட்டுப் பகுதிகளுக்கு Oil / Kerosene பிரயோகித்தல்..

போன்ற பல செயற்பாடுகள் எதிர்வருகின்ற சனிக்கிழமை தினத்தில் நிகழ உள்ளன..!!

இம்முயற்சியின் முதற்கட்டமாக 2017.11.15 இன்று தில்லையடியின் அனைத்து பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், கோயில் நிர்வாகிகள் , நகரசபை நிர்வாக ஊழியர்கள், சுகாதார பரிசோதகர்கள், தில்லையடி பெரிய பள்ளியின் இளைஞர் படை உறுப்பினர்கள் மற்றும் சமுக ஆர்வளர்கள் ஒன்றுகூடி 2017.11.18 ஏற்பாடு செய்யவுள்ள ஊர்தழுவிய சிரமதானப்பணி தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

அதன் அடுத்த கட்டமாக நாளை 2017.11.16 வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு டெங்கு ஒழிக்கும் விழிப்புணர்வு நிகழ்வொன்றும் சிரமதானப்பணி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் தில்லையடி பெரிய பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முயற்சியில் தில்லையடி வாழ் அனைத்து இளைஞர்கள் மற்றும் பெரியோர் சிறுவர்களையும் தவராது பங்குகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஒரே நாளில் ஊர் துடைத்தல் இலகுவான காரியமல்ல..! இன, மத, குழு, அரசியல், நிறுவன பேதங்கள் துறந்து உங்கள் உணர்வுபூர்வமான பங்களிப்பினால் மட்டுமே  இத்திட்டத்தை உயிர்ப்பிக்க முடியும்..!!

Zahran Thajudeen


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All