Puttalam Online
other-news

எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான மனு நவ. 22 இல் விசாரணை

  • 16 November 2017
  • 874 views

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மீள்நிர்ணய வர்த்தமானியை செயலற்றதாக அறிவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு, கண்டி, மாத்தறை மற்றும் எம்பிலிப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த ஆறு வாக்காளர்களால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எல்லை நிர்ணயம் தொடர்பாக நியமிக்கப்பட்ட முதலாவது குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக, உப குழுவின் பரிந்துரைகளை மாத்திரம் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, அண்மையில் வெளியான குறித்த வர்த்தமானிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்றைய தினம் (15) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவின் பிரதிவாதிகளாக, உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All