Puttalam Online
current

இன்றைய சிந்தனைக்கு – குப்பைத் தளமாக மாறியுள்ள புத்தளமும்  குப்பை அரசியலும்

டெங்கு என்ற ஆட்கொல்லியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சகலவிதமான பேதங்களையும் மறந்து முழு ஊரும் எடுத்த பிரயத்தனத்தின் பயனை நாம் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்னர் நகர சபை வேலை நிறுத்தம் என்ற மற்றுமொரு நெருக்கடியினை எதிர் நோக்கியுள்ளோம். இந்நிலையில் முகநூலில் பதிவாகியிருந்த ஆக்கமொன்றினை அதன் உள்ளடக்கம் கருதி இங்கு பிரசுரிக்கின்றோம்.  

———————————————————–

புத்தளம் நகரம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு பல உயிர்களை இழந்தும், ஆயிரக்கணக்கான அளவில் பெரியவர்கள், சிறுவர்கள் என்றும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஊர் தழுவிய ரீதியில் பொது மக்கள் அனைவரது ஒத்துழைப்புடனும் டெங்குவை ஒழிப்போம் என்ற கோஷத்தை முன்வைத்து பாரிய அளவிலான சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்றதன் மூலம் ஊர் புத்துயிர் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்தளம் நகர சபையின் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் தாக்கப் பட்டதன் காரணமாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தாக்கியவர்களை கைது செய்யுமாறு கூறியும் நகர சபை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது யாவரும் அறிந்ததே.

அவரது கடமையை செய்வதற்கு இடையூறு விளைவித்து கடமை நேரத்தில் தாக்கப்பட்டார் என்பதே நகர சபை ஊழியர்களது குற்றச்சாட்டு. ஜனநாயக நாடு என்ற வகையில் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது என்பது அவர்களது உரிமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை இருப்பினும் பொது மக்கள் சார்பில் எமக்கு சில கேள்விகள் உள்ளன. அவை;

*டெங்கு நோயின் கோரத் தாண்டவத்தால் நமது ஊர் அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலையில் குப்பை கூளங்களைக் கூட அள்ள விடாது சுத்திகரிப்பு தொழிலாளர்களும் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது எந்த வகையில் நியாயம்?*

*தாக்கியவர்களை போலீஸ் கைது செய்யும் வரை பகிஸ்கரிப்பு தொடரும் என்று கூறுகிறீர்கள, ஆனால் போலீஸ் குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டும், ஏனயவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்றும் கூறுகிறார்களே, இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எப்போது நிறைவுக்கு வரும்??*

*இன்னும் ஒரு வருடத்துக்கு அவர்கள் தேடப்படினும் அது வரை பொது மக்கள் குப்பைகளோடு குடும்பம் நடாத்துவதா??*

*பொது மக்கள் பலரும் தமது வீட்டு கழிவுகளை தாமே அப்புறப்படுத்த முன்வந்து, குப்பை கொட்டும் தளத்துக்கு கூலிக்கு அமர்த்திய வாகனங்கள் மூலம் கொண்டு சென்ற போது அதையும் மூடி வைத்து அராஜகம் புரிந்துள்ளீர்களே..ஏன் இந்தக் கேடு??*

*தெரு விளக்குகளின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளதே!! சிறுவர்கள், பெண்கள், நோயாளிகள்,வயோதிபர்கள் இருளில் தட்டுத் தடுமாறுகின்றனரே..ஏன் உங்கள் உள்ளங்களும் இருண்டு விட்டன??*

*உங்களுக்கு இது ஜனநாயகம் என்றால் எங்களுக்கு இது ஒரு அடிப்படை மீறல் என்பதை நீங்கள் அறிவீர்களா??*

*குப்பை கூளங்கள் என்பது கடந்த சில மாதங்களுக்கு முன் அதி மேதகு ஜனாதிபதி அவர்களால் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டமாக்கியதை நீங்கள் அறீவீர்களா??*

*அது ஏன் பொதுக் கழிப்பிடங்களைக் கூட மூடி வைத்து அதிலும் அரசியல் செய்ய நினைக்கிறீர்கள்*
*அப்படியாயின் இதனை கழிப்பறை அரசியல் என்று அழைக்கப்படும்*
*Toilet politics*

*சிறுவர்கள் செய்த தவறு என்ன ? ஏன் சிறுவர் பூங்காவை மூடி வைத்துள்ளீர்*

*நூலகத்தை மூடியது ஏன்*

இறுதியாக நீங்கள் வாழ்வது எமது வரிப் பணத்தில். நாம் உங்களது சேவைகளை பெற்றுக் கொள்வது எங்களது அடிப்படை உரிமை என்பதை கருத்தில் கொண்டு சேவைக்குத் திரும்புமாறு கௌரவமான முறையில் பகிரங்கமாக அழைக்கிறோம்.

இன்றேல் நாமும் ஜனநாயக ரீதியில் எமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள போராடுவோம்.


One thought on “இன்றைய சிந்தனைக்கு – குப்பைத் தளமாக மாறியுள்ள புத்தளமும்  குப்பை அரசியலும்

  1. Mohamed SR Nisthar says:

    Strong words and stark warning. Well said.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All