Puttalam Online
regional-news

“மாணவர்களின் அழகிய எதிர்காலம்” – மாணவர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர்களுக்கான ஒருநாள் வலுவூட்டல் நிகழ்ச்சி

  • 17 November 2017
  • 287 views

புத்தளம் பிரதேசத்தில் கல்வி, சமூகம் மற்றும் சூழல் தொடர்பான விடையங்களுக்கு பங்களிப்பு செய்துவரும் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான PULSED (2001 O /L, 2004 A/L) 2010 இலிருந்து தமது பங்களிப்பை புத்தளம் பிரதேசத்திற்கு  நல்கி வருகிறது. 2017/18 ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு கடந்த ஒக்டோபர் மாதம் பொறுப்பெடுத்த பின் அதன் முதல் செயற்றிட்டமாக மாணவர்கள்ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கான ஒருநாள் வலுவூட்டல் நிகழ்ச்சியினை ஒருங்கமைத்தது.

 

அதற்கமைய, அண்மை காலமாக எமது பிரதேசத்தின் சமூக, கலாசார ஒழுங்குகள் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்றுக்கொப்ண்டிருப்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். அதில் மாணவர்களுக்கு மத்தியில் திட்டமிடப்பட்ட வகையில் கொண்டு செல்ல முனையும் போதைப்பொருள் பாவனை மற்றும்  விற்பனையை  மிக முக்கிய காரணியாக குறிப்பிடலாம். இப்போதைப்பொருள் பிரச்சினை பரந்துபட்ட செயற்றிட்டத்தின் மூலமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய ஒன்றாகும். அதன் ஒரு அங்கமாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை எமது அமைப்பு சாஹிரா மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு  கடந்த  7.11.2017, செவ்வாய்க்கிழமை புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான சிறப்பு வளவளராக பிரபல பேச்சாளர் மற்றும்  பயிற்றுனரான  ஷாபிர் முஹம்மத் ஹாஷிம்  – Reality Trainer  அவர்கள்   வருகை தந்திருந்தார்.

இந்நிகழ்வின் முதலிரு அம்சங்களான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிகழ்வுகள்   முறையே காலை 9 மணி முதல் 12 மணி வரை மற்றும் மதியம் 1 மணி முதல் 2.30 வரை  பாடசாலையின் பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவ்விரு நிகழ்வுகளிலும்  தரம்  ஒன்பதை சேர்ந்த சுமார் 200 மாணவர்களும், 55 ஆசிரியர்களும் கலந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த ஒரு நாள் வலுவூட்டல் நிகழ்வில் அடுத்த நிகழ்வான பெற்றோருக்கான நிகழ்வு மாலை 4 மணி முதல் 6 மணி வரை பாடசாலையின் அஸ்வர் மண்டபத்தில் ஏற்பாடாகி இருந்தது. எதிர் பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட சுமார் 750 – 800 வரையான பெற்றோர்கள் கலந்துக்கொண்டது இந்நிகழ்வின் ஒரு உயரிய அடைவாக கருதக்கூடிய அம்சமாகும்.

இம்மூன்று சாராருக்கும் ஒரே நாளில் குறித்த கருப்பொருளில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு பெரிதும் வரவேற்பை பெற்றதோடு எதிர்காலத்திலும் இவ்வகையான வலுவூட்டல் நிகழ்வுகள் திட்டமிடப்பட்ட வேண்டும் என காலத்தின் தேவை கருதி வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க பாடசாலை நிர்வாகம், புத்தளம் பிரதேச  செயலாளர் பிரிவில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணிபுரியும் திருமதி. அமீனா மற்றும் ஊர் நலன் விரும்பிகள் அனைவரும் PULSED இற்கு பக்கபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All