Puttalam Online
regional-news

பயிற்சி அணிக்கு மாணவர்களை தெரிவு செய்யும் படலம்

  • 20 November 2017
  • 259 views

ரூஸி சனூன்  புத்தளம்
புத்தளம் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளின் 16 வயதுக்குட்பட்ட 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகளை உள்ளடக்கிய பயிற்சி அணியினை உருவாக்கும் தோரணையில் பயிற்சி அணிக்கு மாணவர்களை தெரிவு செய்யும் படலம் வெள்ளிக்கிழமை (17) புத்தளம் சாந்த அன்ரூஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
கல்வி அமைச்சின், யாவருக்கும் விளையாட்டு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி அணிகள் உருவாக்கப்படவுள்ளன.
புத்தளம் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் ஆகிய நான்கு விளையாட்டுகளுக்கே இந்த மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
புத்தளம் கல்வி பணிமனையின் உடற்கல்வி பணிப்பாளர் குசலானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உடற்கல்வி தொடர்பான கல்வி அமைச்சின் வளவாளரும், பிரதான பயிற்றுவிப்பாளருமான கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத், புத்தளம் கோட்ட கல்வி காரியாலயத்தின் உடற்கல்விக்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் முஹம்மது ஹனிபா, உதவி பயிற்றுவிப்பாளரும், மணல்குன்று முஸ்லிம் மஹா வித்தியாலய உடற்கல்வி போதனாசியருமான ஜே.எம்.இனூஸ் ஆகியோர் பங்கேற்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All