Puttalam Online
regional-news

தேசிய மர நடுகை தினமும் மாணவர் சமூகத்தின் பொறுப்புணர்வும்

  • 21 November 2017
  • 174 views

இயற்கையை நாம் காப்போம் இயற்கை எம்மைக் காக்கும் இதுவே சுற்றாடல் முன்னோடிகளின் தாரக மந்திரமாகும். காடழிப்புப் பெருகி இயற்கை வளம் அருகிப் போகும் இக்காலப் பகுதியில் வரவேற்கத்தக்க ஆக்க முன்னெடுப்பு எமது சூழலில் இடம்பெற்றுள்ளது. தேசிய மரநடுகை தினத்தை முன்னிட்டு புத்தளம் கற்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலையில் மரநடுகை தினம் இன்று 20.11.2017 உத்தியோகபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

சுற்றாடல் முன்னோடிக் கழகத்தின் ஏற்பாட்டில் காலை 09. 30 மணியளவில் கல்லூரி அதிபர் திருமதி எம். எம். எம் ரோஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண , மாவட்ட மற்றும் வலய சுற்றாடல் முன்னோடி வேலைத்திட்ட அதிகாரிகள் , கல்விமான்கள், சமூக நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர். எளிமையாகவும் இனிமையாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வும் அவதானமும் அவற்றை காப்பதற்கான முன்னெடுப்புகளும் தொடர்பாக அறிவுருத்தப்பட்டது.

கல்லூரி வளாகத்தினுள் நிழல் தரும் மரங்கள் அதிதிகளாய் கலந்து கொண்ட திரு. டீ. எம். கே. திஸாநாயக்க, திருமதி எல். எச். ரஞ்சனி ஆகியோரால் நட்டுவிக்கப்பட்டன. பசுமைத்திட்டத்தின் கீழ் கடந்த பல காலங்களாக கல்லூரியின் ஆசிரியரும் மாவட்ட சுற்றாடல் ஆணையாளருமான திரு ஏ. எச். எம். எம் ஸாபி அவர்களால் பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல் எம். ஏ. எம். எம்  ஃபஸீல்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All