Puttalam Online
regional-news

தில்லை தமிழ் சஞ்சிகை வெளியீட்டு விழா 2017

  • 21 November 2017
  • 202 views

புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம் புத்தளம் நகரை அண்டிய பகுதியைச் சேர்ந்த பல்லின சமூக மாணவர்களும் கல்வியைத் தொடரும் பெரிய பாடசாலைகளுள் ஒன்றாகும்.

இப்பாடசாலை அண்மையில் 2017.11.02 அன்று தனது தில்லை விழாவை வெகு விமர்சயாகக் கொண்டாடியது. தில்லை மரங்கள் செறிந்து வளரும் சிறப்புப் பெயர் கொண்ட இக்கிராமத்து மண் வாசனையையும் பாடாசாலை வரலாற்றையும் மீட்டிப் பார்க்கும் முதலாவது கன்னி முயற்சியாக இச் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது. தரம் 13 மாணவர்களின் கூட்டுப்படைப்பாகவும் எமது பிரதேச தமிழ்ப் பாட ஆசிரியையான திருமதி எம். டீ ஆயிஷா பானு அஜ்மீர் அவர்களை இதழாசிரியையாகக் கொண்டு தில்லையடி மக்களின் வாழ்வியல், மொழியியல் என பாடசாலை சாதனையாளர்கள், மாணவர்களின் எழுத்தோவியங்கள் என அத்தனையும் சுமந்து இச்சஞ்சிகை அரங்கேற்றப்பட்டது.

பாடசாலை அதிபர் திரு எஸ் .எஸ் .எம் ஹுதைலீன்  அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் முந்நாள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சாதனைப்படைத்த மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மாணவ மாணவியரின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

புத்தளம் வரலாற்றுப்பதிவுகளில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய தில்லையடி கிராமத்தினதும் பாடசாலையினதும் சுவடிக் கூடமாக இச்சஞ்சிகை சான்றுபகருகிறது.

தகவல் எம். ஏ. எம். எம்  ஃபஸீல்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All