Puttalam Online
politics

புத்தளம் நகரசபை தேர்தலில் PPAF கூட்டணி களமிறங்குகிறது.

  • 28 November 2017
  • 1,935 views

நடைபெறவிருக்கும் புத்தளம் நகர சபை தேர்தலில் (2018) போட்டியிடுவதற்கு தாம்  தயார் நிலையில் உள்ளாதாகவும்   தகுதிவாய்ந்த  வேட்பாளர்களைக் கொண்ட சிறந்த அணியொன்றினை இம்முறை களமிறக்க இருப்பதாகவும் PPAF இன் ஊடகப்பிரிவு  PuttalamOnline க்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

PPAF முன்வைத்த வன்முறை மற்றும் ஊழல்களற்ற விழுமிய அரசியல் சிந்தனைகளை ஒத்த அரசியல் வழிமுறைகளைக் கொண்ட இன்னும் பல அரசியல் சக்திகள் தற்பொழுது  புத்தளத்தில்   உருவாகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், புத்தளத்தின் அரசியல் எதிர்காலம் பிரகாசமுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் PPAF யின் தலைமைத்துவ சபை கூறுகின்றது.

இந்த வகையில் இணக்கப்பாடான அரசியல் குழுக்களுடன் பேசுவதாகவும், விசேடமாக டாக்டர் ரிபாத்தின் தலைமையில் களமிறங்கியுள்ள நல்லாட்சி அமைப்புடன்  இணைந்து செயற்படுவதற்கு இரண்டு கட்ட சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் PPAF  மேலும் அறிவித்துள்ளது.

இவ்வாறு குறித்த இரு அணிகளும்  புத்தளம் நகர சபை தேர்தலில் கூட்டாக களமிறங்குவது உறுதியாகியுள்ள நிலையில், இன்னும் சில அரசியல் குழுக்கலுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது என்ற இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ரிபாத்தின் தலைமையிலான அணி இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, எங்களுடைய அரசியல் பயணம் தேசிய கட்சியான NFGG யுடன் இணைத்து செயற்பட இருப்பினும் இத்தேர்தலில் PPAF வுடன் கூட்டிணைந்து பரஸ்பர விட்டு கொடுப்புகளுடனும் எம்மோடு  இணைய இருக்கின்ற ஏனைய அணிகளினதும் கருத்துக்களைப் பெற்று பொருத்தமானதொரு கூட்டணியின் கீழ்செயற்படுவதற்கும் தயாராக இருப்பதாக​ தெரிவிக்கப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All