Puttalam Online
current

புத்தளத்தில் டாக்டர் றிபாத் இஸ்மாயில் தலைமையில் NFGG தேர்தலில் போட்டியிடும்

  • 1 December 2017
  • 1,274 views

ரூஸி சனூன்  புத்தளம்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கலந்துரையாடல் ஒன்று டாக்டர் றிபாத் இஸ்மாயில் தலைமையில் அண்மையில் (30) புத்தளத்தில் நடைபெற்றது.

இங்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொள்கைகள், நடைமுறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், புத்தளம் பிரதேசத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் டாக்டர் றிபாத் இஸ்மாயில் அவர்களின் நண்பர்கள் உறவினர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலின் போது புத்தளத்துக்கென்று உடனடியாக இடைக்கால செயற்குழுவொன்று நியமிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான், பொதுச்செயலாளர் நஜா முஹம்மத், தேசிய அமைப்பாளர் எம்.பீ.எம். பிர்தவ்ஸ், தலைமைத்துவ சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் பஸ்லுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All