Puttalam Online
regional-news

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளராக அஜ்னாஸ் கான் நியமனம்

  • 3 December 2017
  • 852 views

ரூஸி சனூன்  புத்தளம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் பதவியினை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியதன் மூலம் நல்லாட்சி அரசின் வெளிப்படை தன்மையை கோடிட்டு காட்டுவதாக  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் நெய்னா முஹம்மது அஜ்னாஸ் கான் தனது கன்னி உரையின் போது தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மூலமாக அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்ட நெய்னா முஹம்மது அஜ்னாஸ் கானை வரவேற்று வாழ்த்து தெரிவிக்கின்ற பிரமாண்டமான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (03) மாலை புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் மாவட்ட தலைவர் மில்ரோய் பெர்னாண்டோ, புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இணை அமைப்பாளர் விக்டர் என்டணி பெரேரா, புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இணை அமைப்பாளரும், வடமேல் மாகாண சபை உறுப்பினருமான என்.டி.எம். தாஹிர், ஆனமடு தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் ஆனந்த சமரகோன், ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தட்சணா மூர்த்தி உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
அதிதிகள் யாவரும் புத்தளம் தபால் நிலைய சந்தியிலிருந்து புத்தளம்  நகர மண்டபம் வரைக்கும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
மாவட்ட அமைப்பாளர்  நெய்னா முஹம்மது அஜ்னாஸ் கான் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த கால அரசியல் வரலாற்றில் புத்தளம் மாவட்டத்துக்கென முஸ்லிம் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட வரலாறு கிடையாது. ஆனால் ஜனாதிபதி அவர்கள் முதன் முதலாக இந்த சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் வதியும் முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும், முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் சம உரிமை உள்ளது என்பதை ஜனாதிபதியின் இந்த செயட்பாடு கோடிட்டு காட்டுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இதற்கு  பக்க பலமாக செயல்பட்டுள்ளனர்.
எனக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த மிகப்பெரிய பொறுப்பின் மூலமாக மாவட்டத்தில் நிலவும் சமகால பிரச்சினைகள், கல்வி மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியுடன் நேரடியாக தொடர்பு கொண்டு உடனடி தீர்வினை பெற்றுத்தருவேன் எனக்கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All