Puttalam Online
regional-news

யாவருக்கும் விளையாட்டு! தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ஆரம்ப கட்ட பயிற்சி

  • 6 December 2017
  • 236 views

ரூஸி சனூன்  புத்தளம்
யாவருக்கும் விளையாட்டு எனும் கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ஆரம்ப கட்ட பயிற்சிகள் புதன்கிழமை (06) காலை புத்தளம் சாந்த அன்ரூஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
புத்தளம் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் ஆகிய நான்கு விளையாட்டுக்களை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சு இந்த திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
இந்த மாணவர்களுக்கான பயிற்சி வழங்கும் நிலையமாக புத்தளம் சாந்த அன்ரூஸ் மத்திய கல்லூரி தெரிவாகியுள்ளது.
ஒவ்வொரு விளையாட்டுக்களுக்கும் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பெண்களை உள்ளடக்கிய தலா 20 மாணவர்களை கொண்ட அணியினர் தெரிவாகியுள்ளனர்.
கால்பந்தாட்டத்துக்கான பயிற்சிகளை புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் உடற்கல்வி போதனாசிரியர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத், மணல்குன்று முஸ்லிம் மஹா வித்தியாலய உடற்கல்வி போதனாசிரியர் ஜே.எம். இனூஸ் ஆகியோர் வழங்கி வைத்ததோடு கரப்பந்தாட்டதுக்கான பயிற்சிகளை ஆனமடு மத்திய மஹா வித்தியாலய உடற்கல்வி போதனாசிரியர் சுமேதா திஸாநாயக்க வழங்கி வைத்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All