Puttalam Online
regional-news

UNFPA மூலம் சமாதானமான இலங்கையை உருவாக்கல்

  • 7 December 2017
  • 243 views

Mariam Raafi

Youth 4 youth இளையோர்கள் மத்தியில் கொள்கை வகுப்பு மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதில் அவர்களது கருத்துக்களையும் சக்தியையும் ஒன்றிணைக்கும் வண்ணமாக இலங்கையின் 4 மாகாணங்களிலிருந்தான இளம் தலைவர்களுக்கான தளத்தை  UNFPA அமைத்துக் கொடுக்கிறது.

அநுராதபுரம் 2017 நவம்பர் 30 இலங்கை மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் 15- 29 வயதுக்கு இடைப்பட்ட இளையோர்களாவர்.

சனத் தொகையானது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான  இளைஞர்கைள  கொண்டிருப்பினுப்பினும் தீர்மானம் எடுப்பதில் இளையோர்கள் பங்கேட்பதில் தடைகள் ஏற்படுகின்றன.

தேசிய மட்டத்தில் இளையோர்களை உள்ளடக்கிய  அபிவிருத்திக்கு அரசாங்கத்தினால் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் யுத்தத்தின் பின்னரான இலங்கைச் சூழல் பிராந்திய மட்டத்தில் இளைஞர்களுக்கு பிரத்தியேகமான சில சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே பிராந்திய மட்டத்தில் இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்கவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இலங்கை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியமானது ( UNFPA) அதன் இளையோர் மாகாண கொள்கை திட்டம் ஊடாக அரச தனியார் துறை கல்வியாளர்கள் சிவில் சமுகம் மற்றும் குறிப்பாக இளைஞர்களுடன் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு வசதியளித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்கனவே நான்கு கலந்துரையாடல்கள்  நடைபெற்றதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான மாகாண மட்ட இளையோர்கொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்சி திட்டமானது இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கான மாகாண மட்ட இளையோர்கொள்கை வரைவுக்கு இலக்காக கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில்  YOUTH 4 YOUTH எனப்படுவது இளைஞர்களால் இளைஞர்களுக்கு முன்னெடுக்கப்படும் அரசாங்கப தனியார் பங்காளர்களை இளைஞர்களுடன் இனைக்கும் . நாட்டின் சமாதானத்தை உருவாக்குவதற்காக வினைத்திரனான தலைவர்களாக இளைஞர்களை வலுப்படுத்துவற்கான தளமாகும். YOUTH 4 YOUTH கலந்துரையாடல்களினூடாக இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென் மற்றும் மத்திய மாகாண இளையோர்களை தொடர்சியான பிராந்திய சம்மேளனங்களுடாக இனைத்து 2018 தேசிய மாநாடு ஒன்றினை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2017 நவம்பர் 27-30ம் நாட்களில் அநுராதபுரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடமாகாணத்திலிருந்து 100 இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந் நான்கு  நாள் வதிவிட நிகழ்வில் வட மகாண இளையோர் கொள்கையில் உள்ளடக்கப்படவேண்டிய வடயங்களை இளையோர்கள்பகிர்ந்து கொண்டதோடு பல வகையான அரச தனியார் நிருவன தலைவர்களிடமிருந்து பல விடயயங்களை தெரிந்து கொண்டனர். அதே போல சுகாதாரம் சுக வாழ்வு மற்றும் தொழில் வாய்ப்புக்கள் எனும் தலைப்புகளில் விவாதங்களையும் மேற்கொண்டனர். அத்துடன் இளைஞர்கள் சமூக மாற்றம் மற்றும் சமூக தலைமைத்துவம் பற்றி நாடளாவிய ரீதியில் உள்ள இளைஞர்களுடன் கலந்துரையாடளை தொடர்வதை ஊக்கு விப்பதற்காக YOUTH 4 YOUTH தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கருத்துரைத்த இலங்கை UNFPA பிரதிநிதி திருமதி றிட்சு நக்கென் அவர்கள் ” சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் இளையோர்களின் பங்கு பரவலாக  அறியப்பட்டுள்ளது.சமூக மாற்றத்தை அடைவதிலும் உலக எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் இளையோர்கள் பாரியதொரு பங்களிப்பை செய்கின்றனர் .இளையோர்கள் அனைவரதும் உள்ளார்த்தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட உலகொன்றை உருவாக்குவதே UNFPA இன் இலக்காகும்.அவ்வகையில் இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதில்  UNFPA பெருமையடைகிறது.

இதில் 2030ஆம் ஆண்டுக்கான நிலைபேறான அபிவிருத்திக்கான நிகழ்ச்சி திட்டத்தில் இளைஞர்களை மையப் பொருளாக்குதலும் அடங்கும் .ஐ.நா தொண்டர்கள் அமைப்புடன் ஒன்றிணைந்து UNFPA யினால் முன்னெடுக்கப்படும் இந்த   youth4youth நிகழ்ச்சி திட்டத்துக்கு ஐ.நா சமாதானத்தை கட்டியெழுப்பும் நிதியம் உதவியளிக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All