Puttalam Online
current

புத்தளம் நகர சபை தேர்தலுக்கு NFGG கட்டுப் பணம் செலுத்தியது

  • 12 December 2017
  • 3,116 views

புத்தளம் நகர சபை தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG)  “இரட்டைக் கொடி” சின்னத்தில் போட்டியிடுவதற்கு   NFGG – PPAF கூட்டணி நேற்று (11)  கட்டுப் பணத்தை புத்தளம் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில்  செலுத்தியது.

புத்தளம் நகர சபைக்கு வட்டாரங்களிலிருந்து 11 பேரையும் இரண்டாவது பட்டியலிலிருந்து 7 பேரையும் மொத்தமாக 18 அங்கத்தவர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ளது.

புத்தளம் நகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த பிரதான கட்சிகள் எதுவும் கட்டுப் பணம் செலுத்தியிராத நிலையில், NFGG யின் புத்தளம் செயற்குழு  செயலாளர் MH தானிஷ் முஹம்மத் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பெயரில்க ட்டுப்பணம் செலுத்தி வேட்பாளர் விண்ணப்பத்தை பெற்று கொண்டார்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All