Puttalam Online
politics

ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் புத்தளம் மாவாட்ட மாநாடும் பொதுக்கூட்டமும் நேற்று நடைபெற்றது

  • 16 December 2017
  • 512 views

ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் புத்தளம் மாவாட்ட மாநாடும் பொதுக்கூட்டமும் நேற்று(15.12.2007) மாலை புத்தளம் நகர மீன்சந்தை கட்டிடத்தொகுதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னாள் பிரதியமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ் அவர்களது ஏற்பாட்டில், நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வளங்கல் அமைச்சரும், ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான அல்ஹாஜ் கெளர ரவூப் ஹகீம் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான போராளிகள்,ஆதரவாளர்கள், அபிமானிகள்,பொது மக்கள் என்று பலதரப்பட்ட தரப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசியத் தலைவர் கெளரவ ரவூப் ஹகீம்,புத்தளம் மாவட்ட அமைப்பாளர் கெளரவ கே.ஏ.பாயிஸ்,வடமேல் மாகாண சபை உருப்பினர் கெளரவ எஸ்.எச்.எம்.நியாஸ்,சுகாதார பிரதியமைச்சர் கெளரவ பைசல் காசீம்,பாரளுமன்ர உறுப்பினர்களான கெளரவ அலிசாஹிர் மெளலானா மற்றும் கெளரவ மன்ஸூர், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கெளரவ தவம், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் கெளர ஹுனைஸ் பாரூக் மற்றும் உயர் பீட உருப்பினர்கள் வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில்லே களமிறங்க தாயார் நிலையில் இருக்கின்ற வேட்பாளர்கள் என்று பலதரப்பட்ட பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

என்றுமில்லாதவாறு முன்னாள் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்கள் முஸ்லீம் காங்கிரஸின் மீள் இணைவுக்கு பிறகு அலை அலையாக திரண்ட மக்கள் கூட்டம் புத்தளத்தில் முஸ்லீம் காங்கிரஸில் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதை நேற்றைய நிகழ்வு சான்று பகிர்கின்றது.

இந்நிகழ்வு இரண்டு அமர்களை கொண்டதாக திட்டமிடப்பட்டு, முதலாவது அமர்வு ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் புத்தளம் மாவட்டத்திற்கான மாநாடு என்ற தொனியிலும் இரண்டாவது அமர் பொது பிரச்சார கூட்டம் என்றதொனியிலும் நடைபெற்றது.முன்னாள் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்களினால் உருவாக்கப்பட்ட இவ்வாரன புதியதொரு அரசியல் கலாசாரம், புத்தளம் அரசியல் வரலாற்றுலே முதல் தடவையானதாகும் மேலும் இந்நிகழ்வு போராளிகளுக்கு புத்தூக்கத்தையும் புத்துணர்வையும் கொடுத்தாகவும் இன்ஷா நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலே 65 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று புத்தளம் நகரசபையை ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கைப்பற்றும் எனவும் எமது கருத்து கணிப்புக்களின் முடிவு தெரிவிக்கின்றது.

இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வான பொது பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசியத்தலைவர் புத்தளம் தொகுதியில் ஶ்ரீ லங்கா முஸ்லீம் தனித்தே போட்டியிடும் என்று தனது இறுதி முடிவை தெரிவித்தார்.

எமது அழைப்பை ஏற்று இந்நிகழ்வுக்கு பல சிரமங்களுக்கட்சியின் மத்தியில் வருகை தந்திருந்த கட்சியின் பிரமுகர்கள் போராளிகள், ஆதரவாளர்கள், அபிமானிகள், இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு,அதற்கு ஒத்தாசை வழங்கியவர்கள்,விஷேடமாக இந்நிகழ்வை மேலும் மெருகூட்டுவதற்காக எங்களோடு தோலோடு தோல் நின்று ஒத்துழைப்புக்களை நல்கிய தேசியத்தலைவரின் சகோதரரான ரவூப் ஹஸீர் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எச்.எச்.பர்ஜீஸ்
(ஹமீத் உஸாமா)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All