Puttalam Online
sports

வெற்றி இந்தியாவுக்கு

  • 17 December 2017
  • 196 views

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.  இதன்மூலம்  தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியுள்ளது.

பகலிரவு ஆட்டமாக விசாகப்பட்டனத்தில் தொடங்கிய இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இலங்கை அணி 44.5 ஓவர்களுக்கு மட்டுமே முகம்கொடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இந்தியா சார்பில் குல்தீப், சகால் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

216 ஓட்டங்களை வெற்றி  இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி 32.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 219 ஓட்டங்களை பெற்று வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All