Puttalam Online
social

புத்தளம் சாஹிரா: புதிய அதிபருக்கு இடமளியுங்கள் பணிவான வேண்டுகோள்!

புத்தளம் சாஹிராக்கல்லூரியில் தற்போது அதிபராக இருக்கும் யஹ்கூப் அவர்கள் தன்னால் முடியுமானவரை புத்தளம் சாஹிராவின் அதிபராக மிக திறமையாக சுமார் 21 வருடங்கள் பணியாற்றி வந்தவர், சுகயீனம் காரணாமாக சாகிராவின் அதிபர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு பணித்திருந்தார்.

இந்நிலையில் புத்தளம் அசன் குத்தூஸ் வித்தியாலயத்தில் இருக்கும் அதிபர் ஜப்பார் அவர்களை புத்தளம் சாஹிராக் கல்லூரியின் அதிபராக நியமிக்க எடுத்த முயற்சிகளின் பயனாக அவருக்கான நியமனம் கல்வி அமைச்சின் மூலம்  புத்தளம் சாஹிரவுக்கு கிட்டியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

.ஆகவே தற்போதைய அதிபர் முறைப்படி அதிபர் பதவியை  ஜப்பார்  அதிபருக்கு வழங்கவேண்டும் என்ற நிலையில், அவரது நியமனத்தை மறுத்து அவரை பாடசாலைக்குள் அனுமதிக்காது அதற்கு தடையாக இருப்பதை பெற்றோராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சாஹிராவை வினை திறன் உள்ள ஒரு பாடசாலையாக மாற்றுவதாயின் ஜப்பார் அதிபாரின் வருகை இன்றியமையாது.

எனவே கணம் மரியாதைக்கும் மதிப்புக்கும் உரிய அதிபர் யாகூப் அவர்களே. தயவு செய்து சட்டரீதியாக நியமனம் பெற்றிருக்கும் புதிய அதிபருக்கு எமது கல்லூரியை ஒப்படையுங்கள்.

நன்றி

 

பெற்றோர்கள் சார்பாக

AR Rizny Ahmed, Marikaar Street Puttalam


One thought on “புத்தளம் சாஹிரா: புதிய அதிபருக்கு இடமளியுங்கள் பணிவான வேண்டுகோள்!

  1. FAIYAZ says:

    சென்றமுறை புரட்சி செய்தவர்கள், அதை போஸ்ட் போஸ்ட் ஆக போட்டவர்களை கானவில்லையாம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All