Puttalam Online
paq-news-bulletin

முகஸ்துதி ஈமானை பலவீனப்படுத்தும் – சியாவுதீன் (மதனி)

  • 29 December 2017
  • 339 views

(PAQ Media Unit)

கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாதாந்த ஈமானிய ஒன்ருக்கூடல் இன்று (29-12-2017) கத்தார் முர்ரா மஸ்ஜிதில் நடைபெற்றது.

கத்தார் அன்பர்கள் கலந்து கொண்ட இவ்வொன்று கூடலில் சியாவுதீன் (மதனி)  வளவாளராக கலந்து கொண்டார்.

“முகஸ்துதி – இஹ்லாஸ் என இரண்டு முரண்பாடு உள்ள செயற்பாடுகளுக்கு மத்தியிலேயே எமது ஈமான் இருக்கின்றது. இஹ்லாஸ் குறைந்து கொண்டு போனால் அங்கே முகஸ்துதியே ஆதிக்கம் செலுத்தும் மாறாக முகஸ்துதி குறைந்து கொண்டு போனால் இஹ்லாஸ் அதிகரித்து ஈமான் பலமாகும்

எமது செயற்பாடுகளில் முகஸ்துதி அதிகரிப்பதாக எண்ணினால் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடுவது சாலச்சிறந்தது” என்பதாக அவரது உரை அமைந்திருந்தது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All