Puttalam Online
paq-news-bulletin

கத்தாரில் வேலை தேடுவோர்களுக்கான வழிக்காட்டல் நிகழ்வு

  • 1 January 2018
  • 712 views

(PAQ Media Unit)

கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் அமைப்பினால் வேலைத்தேடுவோர்களுக்கான வழிக்காட்டல் மற்றும் அமைப்பு பற்றிய அறிமுக நிகழ்வு  அண்மையில் நடைபெற்றது.

சுமார் 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைப்பின் (Guiding Counselling Facilitating – GCF பிரிவின் அங்கத்தவர்கள் சகோ. ரிபாஹ், சகோ. ஜஹாங்கீர், சகோ. இஷாம் மரிக்கார், சகோ. இஸ்மத் ஆகியோர்களினால் தொகுத்து வழங்கப்பட்டது.

வேலைத்தேடுபவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும், தட்குறிப்பு (CV) எவ்வாறு அமைய வேண்டும், கம்பனி பற்றிய விளக்கம் தேவையா.?, நேர்முகப்பரீட்சைக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும், கம்பனியிலிருந்து வரும் அழைப்புக்களை எப்படி அணுக வேண்டும் உள்ளிட்ட விடயங்கள் தொகுத்து வழங்கப்பட்டன.

அதேநேரம் வேலைக்கு சேர்ந்த பின்னர் எவ்வாறு சூழலை அமைத்து கொள்ள வேண்டும், கம்பனியில் வேலை செய்பவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், வேலைகளை எப்படி இலகுவாக அமைத்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட விடயங்களும் நிகழ்வில் உள்வாங்கப்பட்டன.

வேலைத்தேடுபவர்கள், ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்கள் இதன் மூலம் மிகுந்த பயனடைந்ததாக நிகழ்வின் இறுதியில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All