Puttalam Online
other-news

ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

  • 2 January 2018
  • 114 views

நுவரெலிய நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து, தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிட லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 08.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் லொறியை மறித்து பின்னர் மிளகாய் பொடியை சாரதி மற்றும் பணத்தை கொண்டு சென்ற நிறுவன ஊழியர் மீதும் தூவி விட்டு பணப் பைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதுடன்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thanks to DC


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All