Puttalam Online
regional-news

தாருல் குர்ஆன் அரபுக்கல்லூரிக்கு 2018 கல்வி ஆண்டுக்காக புதிய மாணவர்கள் அனுமதி

  • 8 January 2018
  • 160 views

ரூஸி சனூன்  புத்தளம் 

புத்தளம் மன்னார் வீதி இஜ்திமா மைதான வளாகத்தில் இயங்கி வரும் தாருல் குர்ஆன் அரபுக்கல்லூரிக்கு 2018 கல்வி ஆண்டுக்காக புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2018 ம் ஆண்டு 8 வயதுக்கும்13 வயதுக்கும் இடைப்பட்டவராகவும், அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக் கூடியோராகவும், தமது தேவைகளை சுயமாக நிறைவேற்றக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.
பெற்றாரை இழந்த அல்லது வறிய மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதற்கான நேர்முகப்பரீட்சை இம்மாதம் 27 ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. பதிவு செய்த அல்லது பதிவு செய்யாத மாணவர்கள் யாவரும் இதில் கலந்து கொள்ள முடியும் என கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.இஷட்.எம். சௌக்கி (பஹ்ஜி) தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All