Puttalam Online
regional-news

அல் மத்ரஸதுல் நபவிய்யா அரபு மத்ரஸாவின் மூன்றாம் ஆண்டு நிறைவும், பரிசளிப்பு நிகழ்வும்

  • 8 January 2018
  • 339 views

ரூஸி சனூன்  புத்தளம் 
புத்தளம் ஐந்தாம் குறுக்குத்தெருவில் இயங்கும் அல் மத்ரஸதுல் நபவிய்யா அரபு மத்ரஸாவின் மூன்றாம் ஆண்டு நிறைவும், பரிசளிப்பு நிகழ்வும் சனிக்கிழமை (06) மாலை புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் ஏ.எச்.எம். அஸ்வர் மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
மத்ரஸாவின் அதிபர் அல் ஹாபிழ் ஏ.சி.எம். ஜப்ரிஸ் (இஹ்யாயி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான எம்.எச்.எம். நவவி கலந்து கொண்டார். மத்ரஸா பரிபாலன சபை தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம். கமர்தீன், புத்தளம் அசன் குத்தூஸ் முஸ்லிம் மஹா வித்தியாலய அதிபர் எச்.ஏ. ஜப்பார், ஓய்வு பெற்ற ஆசிரியர் என்.எம். டீ. நைனா மரைக்கார், புத்தளம் இஹ்யாவுல் உலூம் அரபுக்கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சனூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பகுதி நேர இந்த அரபு மத்ரஸாவில் கல்வி கற்கும் 500 மாணவர்கள் கலை நிகழ்விலும் கலந்து சிறப்பித்தனர். பரீட்சைகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தினை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விசேட சொற்பொழிவினை இஹ்யாவுல் உலூம் அரபுக்கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஸகீனத் நிகழ்த்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி இங்கு உரையாற்றுகையில், மாண்வர்களுக்கு உலக கல்வியோடு மார்க்க கல்வியும் சிறந்த முறையில் போதிக்கப்படவேண்டும். மார்க்க கல்வி என்ற ஒன்று இல்லாமலேயே இன்று இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. அத்தகைய உயரிய சேவைகளை வழங்கி வரும் இந்த மத்ரஸாவின் சேவைகள் வரவேற்க கூடியது என தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All