Puttalam Online
regional-news

சமாதான நீதவானாக நியமனம்

  • 8 January 2018
  • 339 views

ரூஸி சனூன்  புத்தளம் 
 
புத்தளம் ஜே.பீ. வீதியில் வதியும் ஏ.சி.எம். ஹில்மி தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்ட மேல் நீதிமன்ற நீதவான் புவனேகே ராஜகருணா முன்னிலையில் அண்மையில் இவர் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், புத்தளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.சி.எம். ஹில்மி, அப்துல் கரீம், காமிலா தம்பதிகளின் புதல்வராவார். புத்தளம் வாழ் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்து வரும் இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளரும், டாக்டர் லதீபாவின் கணவரும், சிரேஷ்ட மருத்துவ ஆய்வு கூட பரிசோதகரும் ஆவார்.
இவர் எமது புத்தளம் ஒன்லைனின் புகைப்பட நிருபர் எம்.எச்.எம். ஹஸ்னியின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All