Puttalam Online
regional-news

மீலாத் தின இஸ்லாமிய போட்டிகளின் ஆரம்ப போட்டிகள்

  • 11 January 2018
  • 258 views

ரூஸி சனூன்  புத்தளம் 
புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள மீலாத் தின இஸ்லாமிய போட்டிகளின் ஆரம்ப போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (06,07) புத்தளம் மஸ்ஜித் வீதி முஸ்லிம் கலாசார மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வருடா வருடம் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளியினால் இந்த மீலாத் இஸ்லாமிய போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
பாலர், கனிஷ்ட, இடைநிலை, மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் மாணவ மாணவிகளும் திறந்த பிரிவில் பெரியவர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வர்.
இதில் பாலர் பிரிவுகளுக்கான போட்டிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி பரிலாலான சபை தலைவர் பீ.எம். அப்துல் ஜனாப் தலைமையில் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பாலர் பிரிவுக்கு மாத்திரம் 350 போட்டியாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த பிரிவில் கலந்து கொண்ட அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All