“வேட்பாளர்களின் தாகம் எடுக்கும் பேச்சுக்கள் ஒரு நாளும் வாக்காளர்களின் தாகத்தை தண்ணீரை கொண்டு தீர்க்காது.”
.
அண்மைக்காலமாக கட்சிகள் அங்காங்கே மும்முரமாய் நடைபெறுவதும்
மக்கள் வெள்ளம் அலைமோதுவதும்
எமக்கு கண்கொள்ளாக்காட்சியாக இருப்பது மட்டுமல்லாமல் வருட இடைவெளிகள் விட்டு வரும் குறுங்கால வைபவங்கள் என்று இதை சொல்லலாம்.
.
புத்தளம் நகரில் முதல் மேயர் யார்வருவார் என்ற ஆவலை தினந்தோறும் தூண்டும் வகையில் அரசியல் பேச்சுக்களும் பேரம் பேசுதல்களும் நிகழ்த்தவண்ணம் இருக்க அதிர்ச்சி தகவல்களும் அடிக்கடி வந்தவண்ணம் இருப்பது தேர்தல் காலத்தில் மலிவுகளே
.
மும்முரமாக நடைப் பெற்றுக்கொண்டு இருக்கும் இந்த தேர்தல் பிரசாரங்கள் பிறர் மானம் பறிக்கும் வார்த்தைகளையும் புறங்களையும் அவதூறுகளையும் காற்றில் கரைப்பது தேர்தல் காலத்தில் சர்வ சாதாரணமே!
.
இதற்கு காரணம் ஒருவேளை முச்சந்திகளில் கூட்டங்கள் நடைபெறுவதாக இருக்கலாம். ஏன் என்றால் இவ்விடங்கள் ஷைத்தானின் வசிப்பிடமாக இருப்பதால் ஷைத்தானுக்கு இவர்களை வால் முறுக்க மிகவும் இலகுதானே!
.
தான் நகர பிதாவாக வந்தால் என்ன தொண்டு ஆற்றுவேன் என்பதை விவரிக்காமல் காலம் கடந்தவற்றையும் கட்டுக்கதைகளையும் பேசியே காலம் தாழ்த்துகின்றனர்.
.
எவர் இவ்வட்டாரத்தில் வேட்பாளரோ அவர் சொற்பொழிவை குறைத்து சூழ உள்ள சூரர்களே அதிகம் பேசுகின்றனர்.
.
உண்மையில் மக்களுக்கு எது காலத்தின் தேவையோ, மக்கள் எதை அறிந்துகொள்ள விரும்புகிறார்களோ அதை மறந்தோ அல்லது மறைத்தோ இவர்களின் மேடை பேச்சுக்கள் இருப்பது வேடிக்கையாக உள்ளது. இரத்தம் இல்லா யுத்தம் செய்யும் இவர்களால் மக்கள் குழப்பமடைந்து யாருக்கு தமது வாக்குகளை கொடுப்பது என்ற ஆழ்ந்த சிந்தனையுடன் அளவு கடந்த புலம்பலுக்கும் சென்று விடுகிறார்கள்.
.
நடுநிசியில் நடுங்கும் பனியில் நரம்புகள் புடைக்கும் அளவில் பேசுவதும், நோயாளர்கள் சிறுவர்களை மறந்து நேரம் அறியா பட்டாசுகள் கொளுத்தும் மடமை தனத்தை மக்கள் ஆதரிப்பார்களா ? இல்லை வெறுப்பார்களா ?
.
தயவு செய்து இனியாவது எதார்த்தத்தை உணர்ந்து மக்களுக்கு எது தேவையோ அதை பேசுங்கள். அபிவிருத்திகளை எவ்வாறு முன்னெடுக்க உள்ளீர்கள். உங்களின் தேர்தல் விஞ்சாபணம் என்ன என்பதை தெளிவாக எடுத்துரையுங்கள். பிறர் மாமிசம் புசிக்கும் இந்த மிருக பழக்கம் இனியாவது முடிவிட்கு வரட்டும்.
.
சிறந்த தேர்தல் மேடைகளை அமைத்து அதில் ஆரோக்கியமான கலந்துரையாடல்களை முன்னெடுங்கள். வேட்பாளர்கள் பேசும் மேடைகளை குறைத்து வாக்காளர்களின் வினாக்களுக்கு விடைகூறும் சிறந்த களத்தை அமையுங்கள். மக்களும் தெளிவு பெறுவர். நீங்கள் வாக்குகளையும் அறுவடை செய்வீர்கள்.
.
நான் அறிந்த வரையில் கடந்த காலத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரால் இவ்வாறு மக்களிடையே கேள்வி பதில் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதுடன் மக்களின் சந்தேகங்களுக்கும் விடைகள் கூறப்பட்டன.
.
இதை போன்ற கேள்வி பதில் மேடைகளை ஏற்பாடு செய்து மக்களின் சந்தேகங்களை, குழப்பங்களை கண்டறிந்து அதை தீருங்கள்.
.
தேர்தல் முறையும் மாறிவிட்டது
ஆனாலும் தேர்தல் பிரசாரங்கள் இன்னும் அப்பா காலத்திலேயே இருக்கின்றன.
.
சத்தியத்தை பேசுங்கள்!
சகோதரத்துவத்தை கடைபிடியுங்கள்!
சமாதானத்தை கையாளுங்கள்!
.
இவண்
வாக்காளர்களில் ஒருவன் துபாயிலிருந்து அன்பாத் ஹிபான்ஸ்
.
WAK
Share the post "கட்சி வேற்றுமைகளுக்கு அப்பால் வேட்பாளர் வாக்காளர் சிந்தனைக்கு.!"
சபாஷ் ஹிபான்ஸ்