Puttalam Online
regional-news

Care and share அமைப்பின் மற்றுமொரு மைல்கல்

  • 14 January 2018
  • 583 views

உலகம் எங்கும் வாழும் புத்தளம் சகோதரிகளை இணைத்துக் கொண்டு பல்வேறு சமூக நலத் திட்டங்களை முன்னெடுக்கும் சமூக சேவை அமைப்பே Care and share பெண்கள் அமைப்பாகும்.

கடந்த வருடங்களைப் போன்று புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற
இவ்வைபவத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான பின்வரும் பொருட்கள் வழங்கப்பட்டன.
*காகிதாதிகள்
*புத்தகப் பை
*தண்ணீர் போத்தல்
*சாப்பாட்டுப் பெட்டி
*மாணவர்களுக்கான தைத்த சீருடைகள்

ஒரு மாணவருக்கு தலா ரூபா 6000/= பெறுமதியான பொருட்கள், மற்றும் 4000/= ரூபாவிற்கான பண வவுச்சர் வழங்கப்பட்டன.
இப்பணத்தினூடாக மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான காலை உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

2016, 2017, 2018ம் ஆண்டுகளில் கற்றலில் ஆர்வமுள்ள வறிய மாணவர்களின் நலனுக்காக சுமார் 1.5 மில்லியன் ரூபா Care and share அமைப்பினால் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும்,
* பாடசாலையில் புதிதாக சேறும் வறிய மாணவர்களுக்கு புத்தகப் பை, பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்.
* வலது குறைந்தோர் நிலையம் புதிப்பித்தல், உணவு, போக்குவரத்து உதவி மற்றும் உபகரணங்கள் வழங்குதல்.
* ரமழான் காலத்தில் வறிய குடும்பங்களுக்கு உணவுக்கான பொருட் பொதிகள் வழங்குதல்.
* வறிய மணப்பெண் ஒருவரின் திருமணச் செலவினத்தை முற்றாக பொருப்பேற்று செய்தல்.
* புதிதாக திருமணமான மற்றும் திருமனமாகவுள்ள பெண்களுக்கு உளவள கருத்தரங்குகள் நடாத்தல்.
போன்ற செயல்பாடுகளும் இந்த அமைப்பின்
ஸ்தாபகர் திருமதி ஹஸாரா இனாஸ் அவர்களின் வழி நடத்தலில் அவ் அமைப்பின் உறுப்பினர்களின் சமூக நோக்கான அற்பனிப்புடன் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் பல திட்டங்கள் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All