Puttalam Online
regional-news

தில்லையடியில் ”Knowledge Centre” மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

  • 14 January 2018
  • 371 views

மிக நீணட காலமாக எமது பிறதேசத்தில் வசிப்பவர்களின் கல்வி மற்றும் பொது அறிவுகளை பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லாத ஒரு நிலை காணப்பட்டே வந்தது. இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய அரசியல் பக்கங்களிலிருந்து எந்தளவுதூரம் முயற்சிக்கப்பட்டது என்பதை நாம் அறியவில்லை. ஆனால் அரசியல் முயற்சிகளுக்கப்பால் நல்லுள்ளம் கொண்டவர்களின் ஒருமித்த முயற்சியின் மூலம் மாற்றத்தை நோக்கி நகர முடியும் என்ற ஒரு எண்ணக்கருவை இன்று உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்…!

அன்றாடம் உலகில் எவை எவை அறங்கேருகின்றன என்பதை அறியவும், புத்தகங்களின் பக்கங்களை புரட்டுவதின் ஊடாக எம்மை பூரணப்படுத்தவும், மாணவர்கள் குழுவாக கற்கக்கூடிய வசதியை ஏற்படுத்தவும், அரச தொழில் வாய்ப்புக்களை அறியவும் இன்னும் பல நோக்கங்களை மையப்படுத்தி இன்று முதல் இயங்குகிறது ” Knowledge Centre”.

இத்திட்டம் இன மத வேறுபாடுகலுக்கப்பால் அனைவரும் பயன்பெறும் நோக்கோடு உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் நிர்வாமும் மேற்பார்வையும் தில்லையடி மொஹிதீன் ஜூம்ஆ மஸ்ஜித்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ” இளைஞர் படை” இன் மூலம் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் உருவாக்கத்திற்கும் செயற்பாட்டிற்கும் பல்வேறு நல்லுள்ளங்கள் உதவி புரிந்தனர். இறைவனுக்கு அடுத்து அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

-Youth Force-

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All