Puttalam Online
other-news

சமபோஷ வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் இறுதி கட்ட போட்டிகள் ஆரம்பம்

  • 18 January 2018
  • 260 views

ரூஸி சனூன்  புத்தளம் 
சமபோஷ வெற்றிக்கிண்ண 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டியின் இறுதி கட்ட போட்டிகள் புதன்கிழமை (17) காலை கொழும்பு விளையாட்டு துறை அமைச்சின் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமபோஷ நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ள இந்த போட்டி தொடரில் சகல மாவட்டங்கள் ரீதியாக ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 24 அணிகளுமாக மொத்தமாக 56 அணிகள் பங்கேற்கின்றன.
போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் சமபோஷ நிறுவன பணிப்பாளர் சம்பி கருணாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கல்வி அமைச்சின் உடற்கல்விக்கு பொறுப்பான அதிகாரி கேர்ணல் மஞ்சுள காரியவசம், இலங்கை பாடசாலைகள் கால்ப்பந்தாட்ட சம்மேளன தலைவர் அபேகோன், செயலாளர் திஸாநாயக்க, பொருளாளர் கலாநிதி ஆஷாத், இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளன தொழில் நுட்ப பொறுப்பாளர் சமிந்த ஸ்டோன்வோல்  உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

17 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டிகள் 20 ம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவித்த பொருளாளர் கலாநிதி ஆஷாத் இறுதி போட்டிகள் கொழும்பு ரேஸ் ஹோர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All