Puttalam Online
regional-news

புத்தளம் ஜுவனைல் கிரிக்கட் கழகம் சம்பியன்

  • 23 January 2018
  • 171 views

ரூஸி சனூன்  புத்தளம் 
புத்தளம் இஜ்திமா வளாக நாகாஸ் கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுபோட்டியில் புத்தளம் ஜுவனைல் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது.
“இஸட் இஸட் இஸட்” வெற்றிக்கிண்ணத்துக்கான இந்த கிரிக்கட் போட்டி தொடர் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (19,20) பகல் இரவு போட்டிகளாக இடம்பெற்றன.  புத்தளம் ட்ரகன்ஸ் கழகம் இதற்கு பூரண அனுசரணை வழங்கி இருந்தது.
அணிக்கு 08 பேர்களை கொண்ட 05 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இந்த தொடரில் மொத்தமாக 18 அணிகள் பங்கேற்றன. இந்த 18 அணிகளும் தலா 09 அணிகளை கொண்ட இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விலகல் முறையில்  போட்டிகள் நடைபெற்றன.
இறுதி போட்டிக்கு புத்தளம் ஜுவனைல் அணியும், தில்லையடி ஸ்பார்ட்டன் அணியும் தகுதி பெற்றன. முதலில் துடுப்பெடுத்தாடிய தில்லையடி ஸ்பார்ட்டன் அணி 05 விக்கட் இழப்புக்கு 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
31 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய புத்தளம் ஜுவனைல் அணி 2.1 ஓவர் நிறைவில் 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம் 08 விக்கட்டுகளினால் வெற்றி பெற்று சம்பியனாகியதோடு இரண்டாம் இடத்தினை தில்லையடி ஸ்பார்ட்டன்  அணி பெற்றுக்கொண்டது.
ஆட்ட நாயகனாக ஜுவனைல் அணியின் ரங்கன, தொடர் நாயகனாகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும் ஜுவனைல் அணியின் மலித் ஆகியோர் தெரிவாகினர்.
சம்பியன் அணிக்கு 20 ஆயிரம் ரொக்கப்பணமும், இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சரும், புத்தளம் மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களையும், பரிசு தொகையினையும் வழங்கி வைத்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All